இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
56 ஆரியராவது திருமாலையும், குமரக் கடவுளையும், இந் திரனையும், வருணனையும் குறிப்பன. இவர்கள் நால்வரும் வடமொழியிலுள்ள தெய்வங்கள். இன்றளவும் தமிழ் நாட்டு மக்கள் இந்தத் தெய்வங்களை வழிபட்டு வருகிறார்கள். இந்தத் தெய்வங்களை நம் வாழ்க்கையில் சேர்த்துவிட்ட வட நாட் டான் யார்? இப்போது தமிழ் நாட்டின் கோயில்களில் கும்பிடப்பட்டு வரும் இந்தத் தெய்வங்களை யெல்லாம் நீக்கி விட்டால் நமக்கு மிஞ்சுவது வீரன், இருளன், காட்டேரி பாவாடை முதலிய தெய்வங்கள்தான்.