இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
திராவிடராவது
3
நடைக்கானாலும் கல்வியறிவும் கற்பனா சக்தியும் கலைத்திறமும் அவசியம். நாடக இலக்கியம் நடிப்புக்கென்றே எழுதப்படுவதாகையால் தினசரி வாழ்க்கையில் எடுத்தாளப்படுவதில்லை.‘இயல்’ விரிவான எழுத்தானதால் அதிலுள்ள கற்பனைக் கலைத்திறத்தை பல பக்கங்களைப் படித்துக்படித்துக் கூட்டினால்தான் பார்க்க முடியும். அதனால் அதையும் தினசரிப் பேச்சுகளில் எடுத்தாள இயலுவதில்லை. இசை செய்யுள் வடிவமாக ஜீவசத்துக் குளிகைகள்போல (வைடமைன் பில்ஸ்) சுருக்கமாக இருப்பதால் சுலபமாக மேற்கோளாக எடுத்தாள இசைகின்றது. அத்துடன் மற்ற இரண்டு நடைகளிலும் இல்லாத சங்கீத இன்பமும் இசையில் இருப்பதால் அதை மற்ற இரண்டிலும் உயர்ந்ததாக உலகம் மதிக்கிறது. எனினும் இந்த மூன்று நடைகளையும் வெற்றிகரமாக எழுதத் தெரிவதற்கு மூல காரணமாகிய திறமை ஒன்றேதான்.