இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
ஆரியரும் திராவிடரும் இந்த ஆரியர்கள் யாரோ, திராவி டர்கள் யாரோ, உண்மை அறியவே முடியவில்லை. இதைப் பற்றி ஆராய்ச்சி சொன்னவர் அத்தனை பேரும் அவர வர்களுடைய அனுமானங்களையே ஆதா ரமாக்கி ஒவ்வொருவரும் புதுப்புது சிக் கலைத்தான் புகுத்தினார்களே யன்றி ஒரு வராவது உண்மையைக் கண்டு விட்ட தாகத் தெரியவில்லை. ஆரியர்கள் என்ற ஒரு குலத்தார் வடதுருவத்திலிருந்து கொஞ்சம் கொஞ் சமாகத் தெற்கே வந்து பரவினதாக நெடுநாளாக ஆராய்ச்சிக்காரர்கள் அழு த்திச் சொல்லி வருகிறார்கள். இன்றும் பல புது ஆராய்ச்சிக் காரர்கள் முன்னே சொன்னது முற்றிலும் தவறு என்று கூறி, இந்த ஆரியர் என்ற இனத்தார் தெற்கே இருந்துதான் வடக்கே போனார்களே ஒழிய வடக்கே யிருந்து