பக்கம்:ஆரியராவது திராவிடராவது.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திராவிடராவது 59 சொல்லிக் கொள்வதில் பெருமை கொண் டிருந்தார்கள். ஆரியர்கள் மிக உயர்ந்த வர்கள் என்ற எண்ணத்தை வைத்துக் கொண்டுதான் ஹிட்லரும் இந்த கதி யடைந்து ஜெர்மனியும் சீர்குலைந்தது. தமிழ் மற்ற நாடுகளை விட்டுவிட்டுத் தமிழ் நாட்டை மட்டும் எடுத்துக்கொண்டால் தமிழ் நாட்டில் இப்போது வசிக்கும் எவர் ஆரியர், எவர் திராவிடர் என்று யாராலும் சொல்ல முடியாது. நாட்டிலுள்ள பார்ப்பனர்களை ஆரியர் என்று சிலர் நினைக்கின்றார்கள். தமிழ் நாட்டிலுள்ள பார்ப்பனர்கள் ஆரியர்கள் என்று, அவர்களே எண்ணிக்கொண்டா லும் சரி, அல்லது மற்றவர்கள் எண்ணி னாலும் சரி அது வெறும் மயக்கம்தான். தமிழ் நாட்டிலுள்ள பார்ப்பனர்கள் ஆரி யர்கள் என்றால் அந்த ஆரியர்கள் எப் போது இங்கு வந்தார்கள்? சிலப்பதி காரத்தில் கண்ணகிக்கு உற்ற தோழி யாக இருந்த தேவந்தி என்னும் பார்ப்ப னப் பெண்ணும் அவளுடைய கணவன்