பக்கம்:ஆரியராவது திராவிடராவது.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

60 ஆரியராவது சாத்தனும் வடக்கேயிருந்து வந்த ஆரியர் களா? உக்ர பாண்டியன் ஆட்சியில் கடைச் சங்கத்தில் பல பார்ப்பனப் புல வர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்க ளெல்லாம் ஆரியர்களா? எங்கிருந்தோ பாண்டிய நாட்டுக்கு வந்து பண்டிதர் களாகி சங்கப் புலவர்கள் ஆகிவிட்டவர் களா? தமிழ் இலக்கியம் கண்ட நாள்முதல் தமிழ்நாட்டில் பார்ப்பனர்கள் இருந்து வந்திருக்கிறார்கள் என்பதை எவரும் மறக்க முடியாது. இந்தப் பார்ப்பனர் களை ஆரியர்கள் என்றும் வடக்கே யிருந்து வந்து புகுந்துகொண்டவர்கள் என்றும் வெறும் வம்பு பேசுகின்றோம். உண்மையில் தமிழ் நாட்டில் ஆரியர் களும் இல்லை, திராவிடர்களும் இல்லை. ஆரியர்கள் இல்லை யென்றாலும் திராவி டர்கள் இல்லையென்பது எப்படி என்று நீங்கள் திடுக்கிடலாம். ஆனால் சற்று நிதானித்துப் பாருங்கள். திராவிடம் என்ற பதம் தமிழ்ப் பதமல்ல; இந்தியா