பக்கம்:ஆரியராவது திராவிடராவது.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

66 ஆரியராவது டைய வாழ்க்கைக்கு வேண்டிய வசதி களை யெல்லாம் மன்னவனும் மற்றத் தமிழர்களும் சேர்ந்து தனியாகச் செய்து வைத்து, ஊரின் ஒரு தனிப்பகுதியில் இவர்களை ஒரு தனி இனமாக வைத்துத் தாங்கி வந்தார்கள். தமிழ் சமூகத்தி லுள்ள மற்றவர்களை விட்டு விலக்காக வாழ்ந்து வந்ததினால் இவர்கள் தங்களுக் கென்று ஒரு தனியான பழக்க வழக்க சம்பிரதாயத்தை உண்டாக்கிக்கொள்ள நேர்ந்தது. அந்த சம்பிரதாயங்களைச் சரியென்று மற்ற தமிழர்களும் மதிப்புக் கொடுத்து வந்தார்கள்.) கொஞ்சங் கொஞ்சமாக இவர்கள் தங்களை ஒரு தனி இனமாகவே எண்ணிக் கொண்டு தாங்கள் புதிதாக மேற்கொண்ட பழக்க வழக்கங்களே தங்கள் குல வழக்க மென் றும், தாங்கள் புதிதாகக் கற்றுக் கொண்ட வட மொழியே தங்களுடைய வம்ச பாஷை என்றும், அந்த வடமொழி யிலுள்ள ஆரிய குலம் கோத்திரங்க ளையே தங்களுடைய குலம் கோத்திரங்