இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
4
ஆரியராவது
எந்த மொழியிலானாலும் ஒவ்வொரு காட்டிலும் அங்குள்ள எழுத்தாளர்கள் தான் மக்களின் அறிவை வளர்க்கும் சக்திகள்: அன்பைப் பெருக்கும் ஆற்றல்கள்; உணர்ச்சிகளுக்கு ஊற்றுக் கண்கள்; அமைதியைக் கொடுக்கும் அரண்கள்; சட்டதிட்டங்களைச் சரிப்படுத்தும் சம்மட்டிகள்; சீர்திருத்தங்களுக்குச் சேவகர்கள்; கல்விக்கும் கலைகளுக்கும் காப்பாளர்; மரபைக் காக்கும் மன்னவர்கள்; பண்பைப் பயிர் செய்யும் பாட்டாளிகள்; வாழ்க்கைக்கு வழிகாட்டிகள்; அரசியலுக்கு அமைச்சர்கள்; எழுத்தாளர்களுக்கு எல்லா வல்லமையும் உண்டு. எல்லா எழுத்தாளர்களும் ஒரு மனப்பட்டுவிட்டால் அங்கே எல்லாம் வல்ல இறைவனைக் காணலாம். மனித வர்க்கத்தின் கலன்களை ஆக்கவும் காக்கவும் அழிக்கவும் அவர்களிடத்தில் ஆற்றல் உண்டு. நீண்டகால எழுத்தாளர்களை நீக்கிவிட்டு தினசரி எழுத்தாளர்கள் மட்டும் சேர்ந்து