பக்கம்:ஆரியராவது திராவிடராவது.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

70 இப்படிப்பட்ட ஆரியராவது எண்ணங்களுக்கு இடம் கொடுப்பதும் மிகவும் பாவம். ஆனால் 'பாவம்' என்று பயப்படுகிறவர் இப்போது யார் இருக்கிறார்கள் என்று நாம் எண்ணலாம். எனினும் இந்த 'பாவம்' 'புண்ணியம்' என்ற பதங் களின் அவசியம் மீண்டும் உலகத்தில் விரைவில் உண்டாகு மென்றே நம்ப லாம். "பாவிகளே! உங்கள் பாவங் களை மன்னிக்கும்படி ரக்ஷகனிடத்தில் பணிந்து விண்ணப்பம் செய்யுங்கள். பரம பிதா உங்களை ரக்ஷிப்பான் என்று ஏசுநாதர் பன்னிப் பன்னிச் சொன்னார். ஆனால் இந்த உபதேசங் கள் அடங்கிய பைபிளை' எல்லாக் கிருஸ் துவ நாடுகளிலும் அழகாக அச்சடித்து மாதா கோயிலுக்குப் போகும்போது அலங்காரமாகப் பிடித்துக் கொண்டு போவதற்கு ஒரு அணியாகத்தான் உபயோகித்தார்கள். ஜப்பான் மீது அணு குண்டை வீசி ஒரு நகரத்தையே நாசமாக்கி விஸ்தாரமான பிரதே