இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
திராவிடராவது 73 யோடு பேசிக் கொண்டதுண்டு. ஒருநல்ல உதாரணம் சொல்லுகிறேன். காலஞ் சென்ற பா.வெ.மாணிக்க நாய்க்கர் என்பவர் ஒரு வெகு நல்ல தமிழறிஞர். அவர் சர்க்கார் 'எக்ஸிகியூடிவ் எஞ்சினி யராக' இருந்தவர். எனக்கு அன்பரும், உறவினரும் ஆவார். இந்த ஆரிய திரா விட விவாதத்தில் வெகு தீவிரமாக ஈடு பட்டிருந்தவர். தமிழ் மொழியின் தனிச் சிறப்புகளைத் தனியான முறையில் சொல்லியும் எழுதியும் தந்தவர். மிகவும் சாதுரியமாகத் தர்க்கிக்க வல்லவர். அவர் தாம் விஜய நகர மன்னர்களுடன் உற வுள்ள வம்சத்தில் வந்தவராகச் சொல் லிக்கொண்டார். விஜய நகர சமஸ்தா னத்தை உண்டாக்கியவர்கள் தமிழர்கள் அல்ல. அதை ஆண்டவர்களும் தமிழர் கள் அல்ல. அவர்கள் வட நாட்டின் தொடர் புடையவர்கள். தமிழ் மொழி யையும்,தமிழ் இனத்தையும் மிகவும் பெருமையோடு பேசித் தன்னை ஒரு தமி ழன் என்று சொல்லிக்கொள்வதில்