பக்கம்:ஆரியராவது திராவிடராவது.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திராவிடராவது 75 னோர்கள் சொந்தக்காரராக இருந்தார் கள். நாய்க்கர் என்ற பட்டம் விஜய நகர வீரர்களுக்கும் அவர்கள் பரம்ப ரைக்கும் உண்டு. இதை யெல்லாம் ஒன்றாகச் சேர்த்து மாணிக்க நாய்க்கர் வாதாட ஒரு அபூர்வ மான யுக்தி செய்து, அந்த உரிமையை நிலைநாட்ட ஒரு விண்ணப்பம் தயார் செய்து, சென்னை கவர்னருக்கும், கவர் னர் ஜெனரலுக்கும், சீமையிலுள்ள 'செக்ரடரி ஆப் ஸ்டேட்ஸ்' அவர்களுக் கும் அனுப்பிக்கொண்டார். அந்த விண் ணப்பத்தை நாய்க்கரவர்களே எனக்குக் காட்ட நான் படித்துப் பார்த்தவன். அந்த விண்ணப்பத்தில் 'பாகல்பட்டி 'பகை இல்பட்டி என்பது (பகைவர் களே இல்லாத பட்டி) என்றும், அது ஒரு சிற்றரசு என்றும், விஜய நகர மன் னர்களின் சிற்றரசர்களைச் சேர்ந்த நாய்க்கர்கள் ஆண்டதென்றும், அந்த நாய்க்கர்கள் வழியில் வந்தவர்கள்தான் தம்முடைய முன்னோர்கள் என்றும்