இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
76 ஆரியராவது அந்த சிற்றரசர்களின் அரண்மனை கால கதியால் அழிந்து போய் இப்போது மண் மேடாக இருக்கிறதென்றும், அந்த மண் மேடு, அதில் புதைந்திருக்கக்கூடிய அனைத்தும் தங்கள் குடும்பத்துக்குச் சேரவேண்டும் என்றும், அப்படி உத்தர வாக வேண்டும் என்றும் எழுதப்பட் டிருந்தது. அதற்கு அனுகூலமான பல ஆதாரங்களும் கூறப்பட்டிருந்தன. சரித்திர பூர்வமாக இது சரியோ அல் லவோ நமக்குத் தெரியாது. ஆனால் தமி ழ ர்களை மிகவும் பெருமைப்படுத்தி, தாமும் ஒரு தமிழன் என்பதில் பெரு மிதங் கொண்டு, ராமன் ஆரியன் என் றும், ராவணன் தமிழன் என்றும், ராமா யணம் என்பது ஆரியனுக்கும் தமிழனுக் கும் நடந்த ஒரு சண்டைதான் என்ற விவகாரத்தில் வெகு தீவிரமாக ஈடுபட் டிருந்த மாணிக்க நாய்க்கரும் கூடத் தம்மை ஆரியர்களின் சம்பந்தமே அதிக மாக உள்ள விஜய நகரத்தாரின் குலத்