இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
திராவிடராவது
5
விட்டால் நொடிப்பொழுதில் ஒரு நல்ல காரியத்தைக் கெடுத்துவிடலாம். கெட்ட காரியத்துக்கும் கீர்த்தி உண்டாக்கிவிடலாம். ஆக்கவேலையைக் காட்டிலும் அழிவு வேலையை வெகுசுலபமாகச் செய்துவிடலாம். நீண்ட காலத்துக்கு உதவக்கூடிய இலக்கியங்களை எழுதுகிறவர்களிடத்தும் இந்த வேலை உண்டு. ஆனால் அதன் பலன்களை இப்படி உடனுக்குடன் காணமுடியாது. அவை ‘ஹிட்லர்’ எழுதிய ‘மீன் காம்ப்’ போல நிதானமாக நிதானமாக நிலைகுலைக்கும். எழுத்தாளர்களுக்குள்ள இந்த சக்திகளைக் கண்டுதான் ‘வாள் முனையைக் காட்டிலும் பேனா முனை வலிமையுடையது’ என்று சொன்னார்கள்.
ஆதலால் எழுத்தாளர்களின் பொறுப்புகள் எண்ணிக்கையற்றவை. கடமைகளும் கணக்கற்றவை.
எழுதுவதும் மற்ற எல்லாக் கலைகளையும் போலவே மனிதனைச் செய-