பக்கம்:ஆரியராவது திராவிடராவது.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திராவிடராவது 77 தைச் சேர்ந்தவராகச் சொல்லிக் கொண் டார் என்பது மட்டும் உண்மை. (ராமன் ஆரியனாக இருந்து விட்டால் நமக்கென்ன? ராவணன் ராவணன் தமிழனாக இருந்து விட்டால் நமக்கென்ன? ராமன் ஆரியனாக இருக்கலாம். ஆனால் ராவணன் தமிழன் அல்ல. ஏன் எனில் இலங்கை யில் இருந்தவர்கள் தமிழர் அல்ல. இலங் கையின் மொழியும் தமிழல்ல. அதை இலங்கையின் சரித்திரமாகிய மகா வம்சம்' இன்றைக்கும் சொல்லுகிறது. இப்போது இலங்கையின் சொந்தக்காரர் களாக இருக்கிற சிங்களவர் தமிழர்களைத் தங்களுக்கு இடையூறு செய்கிற விரோதி களாகக் கருதி விரட்டுகிறார்கள். கண் ணுக்கு நேராகத் தமிழனுக்கும் இலங் கைக்காரருக்கும் உள்ள உறவு இப்படி யிருக்க, கண்ணுக்கும் மனத்துக்கும் எட். டாத ராமாயணகால சரித்திர உண்மை களை ஊகிக்க முடியுமா?)