இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
திராவிடராவது 79 வேங்கட மலையும், தெற்கே குமரியாறும் மற்ற இரு புறங்களிலும் கடலுமாகத் தான் இருந்திருக்கிறது. ஆனால் அந்த எல்லை இப்போது இல்லை. பழைய எல் லைக்குள் இப்போது இருந்து வருகிற மலையாளிகளும், கன்னடக் காரரும் அதை ஒத்துக்கொள்ள மாட்டார்கள். ஆகையால் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் மிகுதியாகவுள்ள பகுதி களை யெல்லாம் தமிழ் மாகாணத்தோடு சேர்க்க வேண்டும் என்பது தான் சரி யான நியாயமாகும். அந்த முறையில் ஒரு தமிழ் மாகாணத்தை நிறுவி தமிழர் களின் தனி முறையில் கலைகளையும், கல்வியையும் பெருக்கி தமிழ் அரசு நடத்தி, தமிழர்களுடைய பெருமைகளுக் குக் காவல் புரிவோம். ஆனால், தமிழ் மாகாணத்தில் தமி ழன் தனியரசு கொண்ட பின் இந்திய நாட்டை மறந்து விடக்கூடாது. மறந் தால் தமிழ் மாகாணத்தின் தனியரசும் தடுமாறி விடும். இந்திய நாட்டில்