இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
திராவிடராவது லுகிறேன். போன கணவனுடன் இந்தியாவில் 81 இறந்து மனை உடன் ற கட்டை ஏறி எரிந்து போகிற வழக்கம் வெகு காலமாக இருந்து வந்திருக்கிறது. ரஜபுத்திரப் பெண்கள் போரில் இறந்து போன கணவன்மார்களைக் கருதிக் கூட் டம் கூட்டமாகத் தீக் குளித்ததை சரித் திரமாகப் படித்திருக்கிறோம். இந்தக் கொடிய வழக்கத்தை நீக்க நூறு ஆண்டு களுக்கு முன்னாலிருந்த ராஜாராம் மோஹன் ராய் என்ற வங்காளிப் பிராமணர் வெகு பாடுபட்டு அதற்காக இங்கிலாந்துக்கும் தூது சென்றார். கடைசியாக லார்ட் வில்லியம் பென்டிங்க் என்ற கவர்னர் ஜெனரல் அந்த வழக்கத்தைச் சட்டம் செய்து ஒடுக்கினார்.) இந்த 'சககமனம் வழக்கம் வடநாட்டுக் காரர்களிடம் தான் இருந்ததாக நாம் எண்ணிக் கொண் டோம். ஆனால் இந்த வழக்கம் தமிழ் நாட்டிலும் இருந்திருக்கிறது என்பதை அறிந்தால் அதிசயப்படுவீர்கள். LIIT-6