பக்கம்:ஆரியராவது திராவிடராவது.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

82

ஆரியராவது மிகச்சிறந்த தனித் தமிழ் இலக் கியமாகச் சொல்லப் படுகிற . புற நானூறு என்ற. நூலில் பூதப் பாண்டியன் என்ற ஒரு பாண்டிய மன் னன் இறந்து போனபோது அவனு டைய மனைவியும் உடனிறக்கத் தீக் குளிக்கச் சென்றதை அருகிலிருந்த அமைச்சர்களும், அறிஞர்களும் தடுத்து அறிவுறுத்துகிறார்கள். அவர்களை மீறி அந்தப் பெண் தீயில் இறங்கி இறந்த தாகச் சொல்லப் பட்டிருக்கிறது. இந்த வழக்கம் புற நானூறுக்குப் யின் வந்த தமிழ் இலக்கியம் எதிலும் இல்லை. புற நானூறு காலத்துக்குப் பின் அதாவது நாலாயிரம் ஆண்டுக களுக்கு முன் இந்த வழக்கம் தமிழ் நாட் டில் இல்லா தொழிந்து விட்டதாக ஊகிக்கலாம். அப்படியானால் இந்த வழக்கம் தெற்கே ஆரம்பித்துதான் வடக்கே போயிருக்க வேண்டும் என்று எண்ணவும் இடமிருக்கிறது.