இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
திராவிடராவது 83 இதனால் பல தமிழ் நாட்டு மன்னர் கள் இமய வர்மன், அதி வீர ராம பாண்டியன்' 'ராஜ சூயம் வேட்டவன் 'ராஜ ராஜன்' 'ராஜ ராஜேந்திரன்' ராஜேந்திர மார்த்தாண்டன்' என்ற பெயர்களை வைத்துக் கொண்ட கார ணத்தாலும் வட நாடும் தென்னாடும் ஒன் றைவிட்டு ஒன்று பிரிக்க முடியாத நாக ரிகத்தில் பின்னிக் கிடப்பதாலும் நாம் இந்தியாவின் பொது நலத்தையும் போற்ற வேண்டும். இந்திய நாட்டின் இந்த முழுமையைப் பாரதியார் "முப்பது கோடி முகமுடையாள் உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள் - இவள் செப்பும் மொழிபதி னெட்டுடையான், எனில் சிந்தனை ஒன்றுடையாள்" என்று பாடி இருக்கிறார்.இப்போது இந்திய நாட்டின் ஜனத்தொகை நாற் பது கோடி யென மதிப்பிடப்படுவதால், இப்பாட்டை நாற்பது கோடி முகமுடையாள் உயிர் நலமிக ஒன்றுடையாள் - இவன் ஏற்கும் மொழிபதி னெட்டுடையாள், எனில் எண்ணுதல் ஒன்றுடையாள்,