பக்கம்:ஆரியராவது திராவிடராவது.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

84 ஆரியராவது என்பது போலப் பாடிக் கொண்டாலும் பொருந்தும். இந்த தமிழ் நாடு தனியரசான பின்னும் எண்ணம் நம்முடைய மனதில் மாறாதிருந்தால்தான் 'தமிழ் நாடு தமிழ ருக்கே' என்ற கோஷத்தினால் தவறு வராது. தமிழ் நாட்டில் தாய் மொழி தமி ழல்லாத அனேக வகுப்பார்கள் நெடுங் காலமாக வாழ்ந்து வருகிறார்கள். அவர் களில் அருந்ததியர் (தாய் மொழி தெலுங்கு) சேணியர்கள் (தாய் மொழி கன்னடம்) ஆரிய வைசியர்கள் (தாய்) மொழி தெலுங்கு) சௌராஷ்ட்ரர் (தாய்மொழி சௌராஷ்ட்ரம்) முதலான வர்கள் குறிப்பிடத் தகுந்தவர்கள். இவர் கள் தொகை தனித் தனி லட்சக் கணக் கிலிருக்கிறது. இவர்களை விட சிறு தொகையினரான மற்ற மொழிக் காரர் களும் உண்டு. மேலே சொல்லப் பட்ட வர்களுக்குத் தாய் மொழி தமிழில்லா விட்டாலும் அவர்கள் எல்லா விதத்தி லும் தமிழர்களாகவே வாழ்ந்து வரு