பக்கம்:ஆரியராவது திராவிடராவது.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

88 ஆரியராவது ஆனால் யலில் மலைக்கின்றோம், ஆனால் அவர்கள் ஆட்சி கண்ட அமைதிகளைக் குலைக் கின்றோம்; அவர்கள் செய்யாததில்லை என்று மகிழ்கின்றோம். ஆனால் அவர் கள் செய்து வைத்த இலக்கியத்தை இகழ்கின்றோம். அவர்கள் நீதி நெறி முறைமைகளை வந்தித்தோம், அவர்கள் ஆதரித்த புலவர்களை நிந்தித் தோம்; மாண்டு போன அம் மன்னர் களுக்காகக் கண்ணீர் கண்ணீர் விடுகிறோம்; ஆனால் மாளாதிருக்கும் அவர்கள் அறப் பயிர்களுக்கு வெந்நீர் விடுகிறோம்; அவர்களுடைய புறச் சின்னங்களாகிய வில்,மீன், புலிக் கொடிகளை ஏற்றுகின் றோம், ஆனால் அவர்களுடைய அகச் சின்னங்களாகிய அன்பு தெய்வம் அறங் களைத் தூற்றுகின்றோம். களையெடுக்க எண்ணி முளையெடுக்க முனைந்து விட் டோம். சீர் திருத்தம் பேசி வேர் பறித் தல் செய்கிறோம். சமாதானம் காட்டி சண்டைகளை மூட்டுகின்றோம். ஒற்று மையைக் கூறி வேற்றுமைகளை விரி