பக்கம்:ஆரியராவது திராவிடராவது.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திராவிடராவது 89 வாக்குகிறோம்; அன்பென்று பேணி வம்புகளை வளர்க்கிறோம். அறமென்று நினைத்து மறங்களிலே மனம் செலுத்து கிறோம். தமிழ் நாடு தனி மாகாணமாகி, தமிழ் மக்கள் தனி அரசு கொண்டு, தமிழ் மொழி ஆட்சி புரிய வேண்டு மானால் சேரனும் சோழனும் பாண்டிய னும் காட்டிய செந் நெறிகளில் செல்ல வேண்டும். அவர்கள் விட்டுப் போன அறங்களைப் பாதுகாக்க வேண்டும். அவர்கள் போற்றி வைத்த இலக்கியங் களில் பொதிந்து கிடக்கும் நல்லுணர்ச்சி கள் நம்மதாக வேண்டும். அப்போது தான் சேரன் செய்தது போல வடநாட் டையும் வணங்க வைக்க முடியும். அப் போது தான் பாண்டியனைப் போல சங்கம் வளர்க்க முடியும். அப்போது தான் சோழன் கட்டி வைத்த பெரிய கோயிலைப் போன்ற அரிய வேலையை ஆற்ற முடியும். அப்போது தான் நெற்றிக் கண்ணுக்கும் அஞ்சாது குற்