இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
90 ஆரியராவது றம் கடிந்த நக்கீரனைக் காண முடியும். அப்போதுதான் கொடுங்கோலை வீழ்த் திய கண்ணகி போன்ற பத்தினிக் கடவு ளரைப் பார்க்க முடியும். அப்போது தான் இளங்கோவைப் போன்ற எழுத் தாளர்கள் உதிப்பார்கள். திருவள்ளு வரைப் போன்ற மகாத்மாக்கள் தோன்றுவார்கள். கம்பனைப்போன்ற கவிஞன் பிறப்பான். அப்போதுதான் பல பாஷைகளில் வல்லவனாகி, பத்தே நாளில் பிற மொழியில் பண்டிதனாகி வாதுக்கு வந்தவர்களை வணங்கச் செய்து வட நாட்டு மன்னனிடம் வரிசைகள் பெற்ற குமர குருபரரைப் போன்ற தமிழறிஞர்களைக் காணலாம். அதை யெல்லாம் விட்டு விட்டு, அணுகுண்டை வீசி உலகத்தை அழிக் கப் பார்க்கிற ஐரோப்பிய அநாகரிகங் களில் மோகங்கொண்டு தெய்வ நிந்தனை கள் பேசித் திரிவதற்குத் தமிழ் நாட் டில் தமிழரசு வந்தாலென்ன, இங்கிலீஷ் அரசே இருந்தால்தானென்ன?