________________
94 ஆரியராவது பிராமணர்கூட, கசக்கியாவது பிழியாத உடையை இரண்டாம் நாள் கட்ட மாட் டார்; வட நாட்டு பிராமணரில், செல்வர் களைத் தவிர மற்றவர்கள் அனேக நாட் களுக்கு அழுக்கு ஆடையையே அணி வார்கள். (இது குளிர் தேசத்தை ஒட்டி யது என்று சொல்லலாம். ஆனால் நடுக் குகின்ற குளிரிலும் கொட்டுகின்ற மழை யிலும் கூட தமிழ் நாட்டுப் பிராமணர் அப்படிச் செய்யமாட்டார்.தென்னாட்டு பிராமணன் வட நாட்டுக்குப் போனா லும் அங்கேயும் குளிக்காமலும் உடை மாற்றாமலும் உண்ண மாட்டான்) வட நாட்டு பிராமணர்களில் பெரும்பாலோர் புலால் உண்பவர்கள். தமிழ் நாட்டில், கெட்டுப் போன இரண்டொரு தனி மனி தர்களைத் தவிர மற்ற எல்லாப் பிராம ணர்களும் புலால் உணவைச் சிந்தையா லும் தீண்டாதவர்கள். இந்த வித்தியாசங் கள் ஏன் என்றால் இவர்கள் வாழ்க்கை யில் தமிழ்ப் பண்பு இருக்கின்றது அவர்கள் வாழ்க்கையில் அது இல்லை.