பக்கம்:ஆரியராவது திராவிடராவது.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திராவிடராவது 95 எந்த மதத்துக்கும், எந்த நிறத்துக் கும், எந்த நாட்டானுக்கும், எந்த மொழிக்கும் இடங் கொடுத்தது தமிழ் நாடு. தமிழ் நாட்டுக் கிறிஸ்துவருக்கும் மற்ற நாட்டுக் கிறிஸ்துவருக்கும் பல வித்தியாசங்கள் உண்டு. தமிழ் நாட்டு மகம்மதியருக்கும் மற்ற நாட்டு மகம்மதிய ருக்கும் மாறுபாடுகள் உண்டு. தமிழ் நாட்டு பெளத்தனுக்கும் வேறு நாட்டு பௌத்தருக்கும் வித்தியாசம் உண்டு. மற்ற மதங்களும் அப்படியே. ஒரே மதத்திலும் தமிழ்நாட்டு சைவம் வேறு, வடநாட்டு சைவம் வேறு. தமிழ்நாட்டு வைஷ்ணவம் வேறு, வடநாட்டு வைஷ் ணவம் வேறு. இந்த வித்தியாசங்க ளுக்கெல்லாம் தமிழ் நாட்டில் வசிப்பவர் களுடைய வாழ்க்கையில் தமிழ்ப் பண்பு கலந்திருப்பதே காரணமாகும். இந்தத் தமிழ்ப் பண்பின் அந்தரங்க அடிப்படை இந்த உலக முழுவதும் இறைவன் தன் மக்களுக்குக் கட்டி வைத்த ஒரே வீடென்றும், உலக மக்க ளெல்லாம் அந்த வீட்டிலுள்ள ஒரு குடும் பத்தின் குழந்தைகளென்றும், உலகத்தி லுள்ள வெவ்வேறு மொழிகளும் அந்தக்