பக்கம்:ஆரியராவது திராவிடராவது.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

96 3629 ஆரியராவது. குழந்தைகளின் வெவ்வேறு குரல்க ளென்றும் உலகத்திலுள்ள வெவ்வேறு மதங்களும் அந்தக் குழந்தைகளின் வெவ்வேறு விதங்களென்றும், உலகத் தில் ஒரு சமூகத்துக்கு நேருகின்ற இன்ப துன்பம் அந்த வீட்டிலுள்ள எல்லாருக்கும் நேருகின்ற இன்ப துன்ப மென்றும் எண்ணுகின்ற விஸ்தாரமான எண்ணத்தில் வேரூன்றியது. (தமிழ்ப் பண்பு, இறைவன் உண் மையை மறுக்காது, தெய்வ நிந்தனை பொறுக்காது, பெரியோரைப் பிழை சொல்லாது, முன்னோர்களை மூடர்களாக் காது, பழைமையைப் பழிக்காது நிகழ் கால அவசரத்தால் நிதானம் தவறி விடாது, எதிர்கால ஆசைகளுக்காக எதையும் செய்துவிடாது. இந்தத் தமிழ்ப் பண்பினால் நாம் என்ன பலன் கண் டோம் என்று வெகு எளிதாகக் கேட்டு விடலாம். அதற்கு இந்தப் பண்பில் லாத ஏனைய நாடுகள் அடைந்து விட்ட கலன்களைச் சற்றாகிலும் எண்ணிப் பார்த்தால் தக்க பதில் கிடைக்கும்.