பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

தமிழர் பண்பாடு


(ape) எனும் சொல், எகிப்தியரால் ‘'கபு” (Kabu) என்ற வடிவில் கடன் வாங்கப்பட்டது. மயிலைக் குறிக்கும் எபிரேய . மொழியின் துக்கி (Thukki) மயில், பேரழகு வாய்ந்த வால் உடையவாதல் கருதி, தமிழில் வால் எனும் பொருளில் வழங்கும் தோகை என்பதன் திரிபாம்.

எபிரேய மக்கள். இந்தியாவிலிருந்து அவற்றின் பெயர்களோடு பெற்ற பிற பொருள்களாவன: சடின் (Sadin) பருத்தி உடைகள். திராவிடச் சிந்துவிலிருந்து பிறந்தது. (முன்பும் குறிப்பிடப்பட்டுள்ளது) கற்பஸ் (Karpas) பருத்தி. சமஸ்கிருத ‘கற்பாஸ்” (Karpasa) என்பதிலிருந்து பிறந்தது. கடைசியாக, “அஹல்” (Ahal) தமிழ் அகில், சமஸ்கிருத ‘'அகரு'’ கிரேக்க “அகலோச்சும்” (Agallochum) ஆங்கிலத்தில் ‘'ஈகில் உட்’ (Eagle-wood) அலோஸ் ஹாட் (Aloes-Wood) அல்லது “லின் - அலோஸ்” (lign-alloes) (நறுமணச் செடிகள், காழகில், நிலவாகை ஆகியவற்றாலான தங்கள் எல்லா ஆடைகளும்'’ என்கிறது வழிபாட்டுப் பாடல் (All they garaments of myrrah and aloes and cassia - Psaln xlv:8): பாலஸ்தீனத்திற்குச் சென்ற மற்றொரு இந்திய வணிகப் பண்டம், “கருங்காலி”.

திருவாளர் ‘'ஸ்காப்” அவர்கள், நன்மிகப் பழைய, தெளிவான பழைய கட்டளையின் (Old Testament) குறிப்பு , எழெக்கில் (Ezekiel) அதிகாரம் 27 பிரிவு 13இல் வருகிறது. அதில், அது, டயரின் (Tyre) வாணிகப் பண்டங்களுள் ஒன்றாகப் புலப்படுகிறது. டேடன் (Dedan) நாட்டு மக்கள், தங்கள் வணிகர்கள் ஆவர். பல தீவுகள், அவர்களின் வாணிக நிலையங்களாம், தந்தத்தாலும் கருங்காலியாலும் ஆன ஊது கொம்புகளைப் பாத காணிக்கையாகத், தங்களுக்காக, அவர்கள் கொண்டு வந்தனர். (The men of Dedan were thymer - chants; many isles were the merchandise of thie hand; they through thee, fora present, horms of ivory and ehony) டேடன் என்பது பர்ஷய வளைகுடாவின் தென்கரையாகும் என, ஆக்ஸ்போர்டு பதிப்பாசிரியர் கூறும் விளக்கம் சரியானதாயின், மேலே கூறிய இப்பகுதி, கி.மு. ஏழாம் நூற்றாண்டிற்கு முன்னர்,