பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

தமிழர் பண்பாடு


அப்பழந் தமிழ்ப் பாடல்களும், அழிந்து போயின. வேத மந்திரங்கள், மாக்ஸ் முல்லர், வெறியுணர்வோடு விளக்குவது போல், “குழந்தை நிலை மானுடத்தின் பொருளற்ற உளறல்” அன்று. அம்மந்திரங்களின் மொழிநடை “புலமை நலம் வாய்ந்த இலக்கிய மொழி நடை”, “மதகுரு, வழிபாட்டு இசைப் பாணர்களுக்கிடையே, தலைமுறை தலைமுறையாகக் கொண்டுவரப்பட்ட செயற்கையாக வழக்கிறந்து போனதாக்கப்பட்ட பழம் பெரும் மொழி (A Macdonell. Sans. Lit. P. 20.) வேறு நடையில் சொல்வதானால், வேதமொழி, பாதிரி முதல் பறையன் வரையான, எல்லா நிலையில் உள்ளாராலும் பேசப்பட்ட ஒரு மொழி அன்று. அது ஒரு “தேவ பாஷை”. அது போலவே, இப்போது நாம் பெற்றிருக்கும் பழந்தமிழ்ப்பாடல்களெல்லாம், ஒப்புநோக்க, பிறபட்ட கால இலக்கிய வளர்ச்சியினைக் காட்டுவனவாம். அவற்றின் மொழிநடை, சாதாரண மக்களின், பேச்சு நடையன்று. நனிமிகத் திருத்தம் பெற்ற, மரபுவழிப்படுத்தப்பட்ட இலக்கிய நடையாகும். இப்பழம்பாடல்கள், யாப்பிலக்கண விதிகளின் கட்டுப்பாட்டிற்கு உறுதியாக அடங்கியிருப்பவை. இலக்கிய மரபுகளின், நனிமிக உயர்ந்த பல்வேறு விதிமுறைகளை விளக்கிக் காட்டவல்லன.

இலக்கியக் கிளைமொழிகள்

தமிழ் அரச இனங்கள் மூன்றம், தென்னிந்தியா, ஸ்ரீ ராமனால் அமைதியுறப் பெற்ற பின்னர், ஆட்சிக்கு வந்திருக்க வேண்டும் என நான் கருதுகின்றேன். இம்மூன்று இனங்களில், பாண்டிய அரச இனம், மதுரை நாடு என, இன்று நாம் அழைக்கும் பகுதியில் ஆண்டிருந்தது. இந்நாடு, தமிழகத்தின், இருதயம் போலும் மைய இடமாகும். முழுக்க முழுக்க மருதமாகவே (விளை நிலமாகவே) இருக்கும் சோழ நாடு போலவோ, பெரும் பகுதி குறிஞ்சியாக (மலை நாடாக) இருக்கம் சேர நாடு போலவோ அல்லாமல், பாண்டியநாடு, ஐந்திணைக்காதல் பாடல்களும், அவை ஒவ்வொன்றொடும் உறவுடையவாய, ஐந்திணைப் போர்ப் பாடல்களும் எழுவதற்கு ஏற்புடைய, ஐந்திணைக்கும் உரிய வாழிடங்களைக்