பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

தமிழர் பண்பாடு

இடம் பெற்றுவிட்ட நிகழ்ச்சிகள் அளவிலேயே மனநிறைவு கொள்வர். பழைய இந்தியாவின் ஆண்டுவழி நிகழ்ச்சி நிரல் அறுதியிட்டு முடிவு செய்ய இயலாத ஒன்றாகவே இருக்கிறது. அவ்வாறே தொடர்ந்து இருக்கும். அதனால் நாட்டுப்பற்று மிகுந்த தற்புகழ்ச்சியாளர்க்கும், ஒன்றைப் பலபடப் பெரிதாக்கிக் காட்டும் பொய்க் கூற்றினர்க்கும் போதிய வாய்ப்பினை அளித்து வந்துள்ளது, அளித்து வருகிறது.

கிருத்துவத் தலைமைக்குரு திருவாளர் அஷர் அவர்களின் ஆண்டுவழி நிகழ்ச்சிநிரல் பட்டியல் செலுத்திய மேலாதிக்க விளைவால் உலகம் கி.மு. 40004ல் தோற்றுவிக்கப்பட்டது என நம்பியிருந்த காலத்தில், வேதகாலத் தொடக்கம் கி.மு. 1200 ஆக முடிவு செய்யப்பட்டது. அந்நாளிலிருந்து மண்ணியல் ஆய்வாளர்கள் மனிதனின் கடந்தகால வரலாற்றிற்குக் குறைந்தது நூறாயிரம் ஆண்டுகளாவது ஒதுக்கப்பட ‘வேண்டும் என வாதிட்டு வந்துள்ளனர் என்றாலும், ஆரிய நாகரீகத்தின் செல்வாக்கு சிறிதளவு தானும் காணக்கூடாத கி.மு. 3000க்கும் முந்தியதான சயிந்தவன் நாகரீகத்தின் அடிச்சுவடுகள், அரப்பா மொகஞ்சதரோ ஆகிய இடங்களில் அகழ்ந்து காணப் பட்டன என்றாலும், கடந்த நூறு ஆண்டு கால அளவில் சிறிதும் நம்புதற்கு இயலாத நனிமிகப் பிற்பட்ட காலத்தை வேதகாலந் தொடக்கத்திற்கு ஒதுக்கி விட்ட தேக்கநிலை, ஐரோப்பிய வரலாற்றுப் பேராசிரியர் களை மறுசிந்தனை செய்யத் தடுத்துவிட்டது.

திருவாளர் பர்கிதர் அவர்களின் பட்டியலிலிருந்து, பாரதப் போருக்கு முன்னர், 90 தலைமுறைகளைச் சேர்ந்த அரசர்கள் ஆட்சி புரிந்தனர் என அறிகிறோம். பல்வேறு ஆய்வுகள், நிலைநாட்ட முனைவதுபோல், அப்போர் கி.மு. 15 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்ததாயின், வேதகாலம் கி.மு. 3000 ஆண்டுகளுக்கு மிக முற்பட்ட காலத்தில் தொடங்கியதாதல் வேண்டும்.

ஆரியரின் ஒற்றைத்தி வழிபாட்டுமுறை, வேதகாலத்து முத்தீவழிபாட்டு முறைக்கு முன்னே, மிக நீண்ட காலத்திற்குச் சிறந்து விளங்கியிருத்தல் வேண்டும். இவ்வகையால்,