பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வழக்கில் உள்ள பழந்தமிழ்ப் பாக்கள்

135


வழிவழியாக வந்த காதுவழிச் செய்திகள் மூலமும் அறிந்து கொண்ட அத்தொகை நூலைத் தொகுத்தவரின் பிற்காலத்தைச் சேர்ந்த ஒருவரால் எழுதப்பட்டனவாகத் தெரிகிறது. இத்தொகை நூலுக்குத் தெள்ளாறு எறிந்த நந்திவர்ம பல்லவன் (கி.பி. 830-854) காலத்தில் வாழ்ந்திருந்த, கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டுப் புலவர், பாரதம் பாடிய பெருந்தேவனார், பாடிய, கடவுள் வாழ்த்துப் பாடல் ஒன்றும், முன்னுரைப் பாடலாகக் கொடுக்கப்பட்டுளது. இக்கடவுள் வாழ்த்துப் பாடல் ஆகம சமயக் கொள்கைகள், கி.பி. 6 முதல் 9 வரையான நூற்றாண்டுகளில் மக்களிடையே செல்வாக்குப் பெற்றுவிட்ட பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்ட சிவனாகக் கொண்டு சிவன் புகழ் பாடுகிறது. இப்பெருந்தேவனார், சிவன் புகழ்பாடும் கடவுள் வாழ்த்து முன்னுரைப் பாடல்களை அகநானூறுக்கும், ஐங்குறுநூறுக்கும், முருகன் புகழ்பாடும் கடவுள் வாழ்த்துப் பாடலைக் குறுந் தொகைக்கும், விஷ்ணு சகஸ்ராம ஸ்லோகத்தின் மொழிபெயர்ப்பாக விளங்கும் திருமால் வாழ்த்துப் பாடலை நற்றிணைக்கும் கொடுத். திருப்பதால், இப்பெருந்தேவனார், பழங்காலப் பாடல்களைத் தொகுப்பதில் பெரு முயற்சி மேற்கொண்டார் எனத் தெரிகிறது.


பிற்காலப்பாக்களைக் கொண்ட மற்ற நான்கு தொகைகள் :

இந்நான்கு தொகை நூல்கள் அல்லாமல் ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலிநூற்றி ஐம்பது என்ற வேறு நான்கு தொகை நூல்களும் உள்ளன. இவை முன்னவை போல, வேறு வேறு ஆசிரியர்களால், பாடப்பட்ட வேறு வேறு பொருள் கொண்ட பாக்கள் கலந்து வரத் தொகுக்கப் பெற்றவை அல்ல. முதலாவதான ஐங்குறுநூறு, ஒவ்வொரு திணைக்கும் அத்திணைப் பொருளை விளக்க, ஓர் ஆசிரிய ரால் பாடப்பெற்ற நூறு நூறு பாக்களாக, ஐந்திணைக்குமாக தொகை, ஒவ்வொரு திணைக்கும் முப்பது என ஐந்து திணைக்குமாக, முன்னைய தொகைகளின் பாவகை போல் அல்லாமல், வேறு பாவகையில் யாக்கப்பட்ட, ஆனால் அதே . பயன் குறித்த நூற்றி ஐம்பது பாக்களைக் கொண்டது.