பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் வாழ்க்கை கி.மு. 500 முதல் கி.பி. 1 வரை

141


போல, விரைந்து மேலே எழும் இடமாகிய காட்டு நாட்டா னாகிய என் காதலனோடு, நாங்கள் பழகிய அவ்விடத்திற்கு ஓடிவிட்டதே!

யானே, ஈண்டையேனே! என் நலனே,
ஏனல் காவலர் கவண் ஒலி வெரீஇக்
கான யானை கைவிடு பசுங்கழை
மீன் எறி தூண்டி லின் நிவக்கும்
கானக நாடனொடு ஆண்டுஒழிந் தன்றே!
                    குறுந்தொகை : 54 )

ஊர்வம்பு பேசித் திரியும் அயலில் மகளிர், காதலர் குறித்து அம்பல் உரைக்கலாயினர். ஆதலால், அப்பெண்ணின் வளர்ப்புத் தயாயாம் செவிலியின் மகளாய், அப் பெண்ணோடு வளர்ந்தவளாய தோழி. நம் காதலை இனியும் மறைத்துப் பயன் இல்லை. அதை ஊர் அறிய உலகு அறிய உணர்த்தி விடுதேலே நலம்" என மறைத்து மொழி கிளவியால் கூறத்தொடங்கினாள்: மகளே உன் மார்பை விரும்பும் நம் இனிய தலைவன், மலைவளர் சந்தனம் பூசிய மார்பில் முத்துமாலை அணிந்துகொண்டு, சுனையில் வளர்ந்த குவளையின், வண்டுபட விரிந்த மலர்களால் ஆன கண்ணி யைத் தலையில் புனைந்து கொண்டு, நம் வீட்டிற்கு நள்ளிரவில் வந்து செல்கின்றான்; அக்காலத்தில், அவன் வந்து செல்லும் வழியில், மன்றங்களில் வாழும் மரையா வெகுண்டு ஓடுமாறு, அதன் ஆணைக் கொன்றுவிட்டு, சிவந்த கண்ணும், கருத்த உடலும் வாய்ந்த புலி முழங்கும். ஆகவே, நம் களவு ஒழுக்கத்தை மறைக்கும் காலம் இதுவன்று; நம் களவு ஒழுக்கத்தைப் பலர் அறிய நான் கூறிவிடுவேன். அதை நீயும் விரும்பி ஏற்றுக் கொள்வாயாக".

மலைச்சேர் அஞ்செஞ் சாந்தின், ஆர மார்பினன்,
சுனைப்பூங் குவளைச் சுரும்பார் கண்ணியன்
ஒருநாள் வந்து நம்மனைப் பெயரும்;
மடவரல் அரிவை? நின் மார்பு அமர் இன் துணை
மன்ற மரையா இரிய ஏறு அட்டுச்