பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெளிநாட்டு வாணிகம் கி.மு. 600 முதல் கி.பி. 14 வரை

177


பெறவில்லையாகவே, அக்காலை நடைபெற்ற சிறு வாணிகத்திலும், வாங்கிய பண்டங்கள், உரோம நாட்டுப் பணம் கொடுத்து வாங்கப்படவில்ல.. பல நூறு ஆண்டு காலமாக இருந்துவந்த பழைய தடத்திலேயே வாணிகம் நடைபெற்றிருக்கக் கூடும். நடைபெற்றிருந்தது. ஆனால், நடுவர் இருவர் குழு ஆட்சியின் பிற்பகுதிவரை, உரோம அரசு, கிழக்கு நோக்கி விரிவடையவில்லை. துணிவுமிக்க உரோம வணிகர்களுக்குப் பல்மைரா (Palmyra) தன்னுடைய கதவு களைத் திறக்கவில்லை. ஜூலியஸ் சீசரால் , அலெக்ஸாண் டிரியா, கி.மு. 47 இல், கைக்கொள்ளப்பட்டது என்றாலும், கடல் வாணிகம் அராபியப்படகுகளில், கடற்கொள்ளைக் காரர்களின் பிடியில் சிக்குண்டிருந்த கடற்கரையை ஒட்டி நடைபெற்று வந்தமையால், அக்காலை வாணிகம், சிறிய அளவில், நிலையற்ற தன்மையிலேயே நடைபெற்று வந்தது. அக்காலத்தில், ஐரோப்பாவுக்கு, இந்தியாவிலிருந்து, என்னென்ன ஏற்றுமதி செய்யப்பட்டாலும், அவை. பெரும்பாலும் உரோமுக்குச் செல்வதில்லை. கிரேக்கத்திற்கே சென்றன. [J. R. A. S. 1904: Page : 593 - 94. Sewell] திருவாளர் ஸ்வெல் அவர் ஆட்சிக்காலத்து நாணங்களில், இதுவரை ஒருசில நாணயங்களே இந்தியாவில் கண்டெடுக்கப்பட்டன என்ற உண்மை நிலையை அடிப்படையாகக் கொண்டு எழுந்தனவாம்.

இக்கால கட்டத்தின் இறுதியில், மத்திய தரைக்கடல் மக்கள் மீது, அடுத்தடுத்துக் கொண்ட வெற்றியும், நடத்திய கொள்ளையும், உரோமப் பேரரசின் கருவூலத்திற்கு ஒப்புக்காட்ட இயலாப் பெருஞ்செல்வத்தைக் கொண்டு வந்து சேர்த்தன. கீழ் நாடுகளைச் சேர்ந்த, மதிப்புமிக்க வணிகப் பண்டங்கள் மீதான சுவை, ஒரே இரவில் வளர்ந்துவிட்டது. சிற்றாசியா, சிரியா நாடுகளை வென்று கொண்டாரைச் , சிறப்பித்து மக்கள் எடுத்த விழாக்கள், மக்கள் ஆர்ப்பரிப்புக் குக் காரணமாகிவிட்ட பெருஞ்செல்வத்தால் சுடரொளி வீசிச் சிறப்புற்ற" (Scoffs periplus.page: 5] பழைய சிக்கன், எளிய வாழ்க்கைமுறை, பகட்டு வாழ்வின் கவர்ச்சி முன் நிற்கமாட்டாது, நெடுங்காலத்திற்கு முன்பே விடைபெற்றுக்