பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198

தமிழர் பண்பாடு


கருப்பொருள், இலக்கிய மரபுகள் ஆகியவற்றால், தமிழ்ச் செய்யுள், சமஸ்கிருதச் செய்யுளிலிருந்து அறவே வேறுபடுவது கண்ட இப்பிராமண ஆசிரியர்கள், தம் இலக்கண நூல்களில், இப்பொருள்கள் பற்றிய ஆய்வினையும் மேற்கொள்வது தேவை என உணர்ந்தனர். திரணதூமாக்கினியாரின் நூலாம். அவர் தமிழ்ப் பெயரால் வழங்கும் தொல் காப்பியத்தின் பிற்பகுதிகள், பண்டைத் தமிழ்ப் புலவர்கள், தமக்கே உரிய தனி இயல்பிற் பாடிய பாடற்பொருள்களாம் அகம், புறம் ஆகியவற்றின் ஒவ்வொரு நிகழ்ச்சிகள் குறித்தும் ஆய்வு செய்கின்றன. பொருளதிகாரம் என்ற தொல்காப்பியத்தின் ஈற்றுப் பகுதியிலிருந்து, ஆரியர்களோடு நெருக்கமான தொடர்பு கொள்வதற்கு முன்னர், தமிழர் நடத்திய வாழ்க்கை முறை, தமிழ் உள்ளம், ஆரிய இலக்கியங்களுக்கு ஆட்படாத தற்கு முற்பட்ட தமிழ் இலக்கியம் ஆகியவற்றின் முழுப் படத்தை வரைந்து கொள்ளலாம்.

அது போலும் ஒரு படக்காட்சி, தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் காட்டியிருப்பது போல, ஆரியத்துக்கு முந்திய தமிழர் நாகரிகம்” (pre Aryan Tamil Culture) என்ற என் நூலிலும், இனி வர இருக்கம், பண்டைத் தமிழர் (Ancient Tamilis) என்ற என் நூலிலும் காட்டியிருக்கும் படக்காட்சி களை, முழுமையாக்கும். -

பொருளதிகாரத்தில் ஆரிய நுழைவு

தமிழ்ப் பாக்கள் குறித்த தம்முடைய இலக்கணத்தில், ஆரியக் கருத்துக்களை இறக்குமதி செய்யும் கவர்ச்சி யிலிருந்து, தொல்காப்பியனார் விடுபடவில்லை. பண்டைத் தமிழ்ப் பாக்களின் மரபுகளை அல்லது விதி முறைகளை விளக்கிக் கூறும்போது, அவர் காலத்தில் வழக்கில் இருந்த, மறைந்தன போக எஞ்சியிருந்த அனைத்துத் தமிழ்ப் பாக்களையும் உறுதியாகப் பின்பற்றியுள்ளார். ஆனாலும், தாம் பெற்றிருந்த, சமஸ்கிருத இலக்கிய அறிவாலும், அரசியல் நெறிமுறைகளும், சமுதாய அமைப்புகளும், தெய்வத்தன்மை யால் வகுக்கப்பெற்றவை என்ற தம் நம்பிக்கையாலும், அவர் அடிக்கடி ஆழ்த்தப்பட்டுள்ளார். சமுதாய உரிமையோடு,