பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200

தமிழர் பண்பாடு



தமிழில் சமஸ்கிருதச் சொற்கள் நுழைவு

அகத்தியனாரும், தொல்காப்பியனாரும், தமிழ் நெடுங்கணக்கு ஒலி முறையில் வழங்கப்பட்டுவிட்ட சமஸ்கிருதச் சொற்களாம் தத்பவச் சொற்கள் சிலவற்றைத் தமிழில் புகுத்திவிட்டனர். அவ்வகைச் சொற்கள் இடைக்கால உரையாசிரியர்களின் உரையில் எடுத்ததாளப்பட்டிருக்கும் அகத்தியச் சூத்தரங்களிலும் தொல்காப்பிய இலக்கணத்திலும் காணப்படுகின்றன. ஆனால், இலக்கண விதிகளைக் குறிக்கவல்ல மரபுச் சொற்களில் பெரும்பாலன வற்றிற்குத் தமிழ்ச் சொற்களைக் காணுமளவு , தமிழின் சிறப்பினை அகத்தியனார், மதித்திருந்தார். கிடைத்திருக்கும் பழைய தமிழ் இலக்கியங்களில், சமஸ்கிருதத்திலிருந்து கடன் பெற்று வழங்கப்பட்டிருக்கும் சொற்கள் மிகமிகக் குறைவு அல்லது அறவே இல்லை. ஆனால், காலம் செல்லச் செல்ல ஒரு . பாடலில் இடம் பெற்றிருக்கும் சமஸ்கிருதச் சொற்களின் சதவிகிதம், அப்பாடலின் காலத்தை உணர்த்தும் அறிகுறியாம் எனக் கொள்ளுமளவு, அச்சொற்களின் நுழைவு, படிப்படியாகப், பெருகிக் கொண்டே வந்துளது. இவ்வாறு, சமஸ்கிருதச் சொற்கள், தமிழில் மேலும் மேலும் இடம் பெற்று வந்தன என்றாலும், தொல்காப்பியப் பொருளதிகாரத்துப் பெரும்பகுதிக் கருப் பொருளாக இருக்கும் தமிழிலக்கிய, மரபுகள், ஆறாவது நூற்றாண்டு வரை விடாமல் கடைப் பிடிக்கப்பட்டு வந்துள்ளன.

அகத்தியர் காலம்

அகத்தியனார், அவர் மாணவர் தொல்காப்பியனார் ஆகியோரின் காலம் எது? அகத்தியனார் இலக்கணம், இப்போது இல்லை. ஆனால், தொல்காப்பியனார், அவரை அடிக்கடி எடுத்து ஆளுகிறார். அவர் சூத்திரங்களில் எங்கெல்லாம் என்று கூறுவர் எனப் பொருள்படும் ‘'என்ப'’ என்ற சொல் இடப்பெறுகிறதோ, அங்கெல்லாம் உரையாசிரியர்கள் என்று கூறுவர் ஆசிரியர்” என்றே பொருள் கூறுகின்றனர். தொல்காப்பியர், தம்முடைய