பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் இலக்கியத்துள் சமஸ்கிருத நாகரீகத்தின்...

201


இலக்கணத்தை " எழுத்து என்று சொல்லப்படுபவை யாவை என்றால், அவை, அ என்ற எழுத்தில் தொடங்கி, ன் என்ற எழுத்தில் முடியும் முப்பது என்று ஆசிரியர் கூறுவர்" என்ற கூற்றோடு தொடங்குகிறார்.

"எழுத்து எனப்படும்,
அகரம் முதல்,
னகர இறுவாய் முப்பஃது என்ப."
                (தொல் : எழுத்து : 1)

ஆகவே, அகத்தியனார் தம்முடைய இலக்கணத்தைத் தமிழ் எழுத்துக்கள் முப்பது என்ற எண்ணிலேயே தொடங்கினார் என நாம் கொள்ளலாம். எழுத்து என்ற - சொல், தமிழ் இலக்கண ஆசிரியர்களால், குறிப்பிடத்தக்க ஒரு சிறப்பான நிலையில் ஆளப்பட்டுளது. ஒலியையும், உருவத்தையும் ஒருசேரக் குறிக்கும் வகையில், அது பெயரிடப்பட்டுளது. முன்னது ஒலிவடிவில் உள்ள எழுத்து எனப் பொருள்படும். ஒலிவடிவு எழுத்து' என்றும், பின்னது நேர்க்கோடுகளாகவும் வளைந்த கோடுகளாகவும் வரையப்பட்ட எழுத்து எனப் பொருள்படும். வரிவடிவு எழுத்து" என்றும் அழைக்கப்படும். ஆங்கிலத்தில் ஒலிவடிவெழுத்து, வரிவடிவெழுத்து என்ற இரண்டையும் ஒருசேரக் குறிக்கும் இயல்புடைய சொல் எதுவும் இல்லாமையால் எழுத்து என்ற அச்சொல்லை அப்பொருள் குறிக்கும் வகையில் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது இயலாது. அக்ஷரா என்ற சொல் சமஸ்கிருத ஆசிரியர்களால் இவ்விரு பொருள் குறிக்கும் வகையில், ஆளப்படுகிறது. ஆனால், அக்ஷரா என்ற அச்சொல், கேட்கக்கூடிய ஒலியை உருவாக்கும், காற்றின் அலை அதிர்வின், வானவெளி அடித்தளத்தின் மூலமாம். நிலைபேறுடைய ஒலி எனக்கருதும் மீமாம்சகர், மற்றும் வியாக்கர்னிகாக் கருத்துக்களோடு தொடர்புடையது ஆகலின், எழுத்து என்ற தமிழ்ச்சொல், அக்ஷரா என்பதன் மொழிபெயர்ப்பு ஆகாது.

எழுத்துக்கள் குறித்து அகத்தியனார் கூறும் இலக்கணப் படியே, தமிழ் வரிவடிவெழுத்துக்கள், உருது மொழிக்காகப்