பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் இலக்கியத்துள் சமஸ்கிருத நாகரீகத்தின்...

205


தொல்காப்பியனார் காலத்தை உறுதி செய்யத் துணைபுரியும் பிறிதொரு செய்தியும் உளது. அகத்திணைத்தலைவனின் தோழர்களாகவும், அவன் காதல் ஒழுக்கங்களுக்குத் துணைவர்களாகவும் வருவோருள், பார்ப்பார்களையும் குறிப்பிடுகிறார்.

"பார்ப்பான், பாங்கன், தோழி, செவிலி
சீர்த்தகு சிறப்பின் கிழவன் கிழத்தியொடு
அளவியன் மரபின், அறுவகை யோரும்
களவினில் கிளவிக்கு உரியர் என்ப" .

"பாணன், கூத்தன, விறலி , பரத்தை ,
யாணம் சான்ற அறிவர், கண்டோர்,
பேணுதகு சிறப்பின் பார்ப்பான், முதலா,
முன்னுறக் கிளந்த கிளவியொடு தொகை இத்
தொன்னெறி மரபிற் கற்பிற்கு உரியர்"

"பார்ப்பார் அறிவர் என்றிவர் கிளவி,
யார்க்கும் வரையார் யாப்பொடு புணர்ந்தே"
 
         தொல். பொருள் : செய்யுள் : 181, 182, 189

அவ்வகையில், காதல் நிகழ்ச்சிகளில் பெருந்துணை புரிபவர்களாகப் பிராமணர்கள் ஆளப்படுவதை, ஆழ்ந்து முடிவு செய்துள்ளார். இது சமஸ்கிருத நாடகத்தின் ஒரு மரபு ஆகும். அகநானூற்றிலோ, அல்லது புறநானூற்றிலோ அத்தகைய குறிப்பு எதையும் காண முடியவில்லையாதலின் தொல்காப்பியனார், அதை ஒரு கொள்கையளவில் கூறியுள்ளாரேயல்லது, ஓர் உண்மை நிகழ்ச்சியாகக் கூறவில்லை என்றே நான் எடுத்துக் கொள்கிறேன். புறநானூற்றில், பார்ப்பார் என்ற சொல், நான்கு முறை இடம் பெறுகிறது; அந்தணர் மற்றும் அவர்தம் புலமை பற்றி, மேலும் எட்டுக்குறிப்புகள் உள்ளன.

"ஆவும் ஆன் இயல் பார்ப்பன மாக்களும்"
                           புறம் : 9:1

"பார்ப்பார்த் தப்பிய கொடுமை"
                         - புறம் 34 : 3