பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

236

தமிழர் பண்பாடு


உண்ணுமாறு, பலி உண்ணும் கடவுளையும், காக்கைகளையும் அழைப்பதைக் கூறுகிறது பிறிதொரு செய்யுள்.

"மணிக்குரல் நொச்சித் தெரியல் சூடிப்,
பலிகள் ஆர்கைப் பார்முது குயவன் .
இடுபலி நுவலும் அகன்தலை மன்றத்து
விழவுத்தலைக் கொண்ட பழவிறல் மூதூர்".
          - நற்றிணை : 293 : 1-4

குயவனின் மந்திரக் கைத்திறன் இன்னமும் அழித்து. விடவில்லை. குழந்தைகளை, ‘அக்கி’ எனப்படும் தோல் நோய் பற்றிக் கொண்டதும், அவற்றின் தாய்மார், குழந்தைகளைக் குயவனிடம் கொண்டுசெல்ல, அவன் ஒரு குச்சியை, ஒருவகைச் செம்மண் குழம்பில் நனைத்து, அக்கொப்புளங்கள் உள்ள பகுதியைச் சுற்றி, யாளி எனப்படும் ஒரு கற்பனைப் பேயின் உருவத்தை வரையச், சில நாட்களுக்கு கெல்லாம் அந்நோய் மறைந்து போய்விடும்.

உடைகளை வெளுத்துக் கஞ்சியூட்டல், பாடற்பொருளாக அமைவதற்குத் தகுதியற்ற சிறு செயல்களாகப் புலவர்க் நினைக்கவில்லை. "கூத்து முதலாம் களியாட்டங்கள் ஒருபால் நிகழ, ஓயாது விழாக் கொண்டாடிக் கொண்டிருக்கும் மூதூர்களில், ஆடை களைப் பருத்தி ஆடை, பட்டாடை என இனம் பிரித்து அழுக்குப் போகத் துவைத்தளிக்கும் தொழிலைக் கையோய்வதில்லாமல் செய்வதால் வறுமை அறியாது வாழும் சலவைத் தொழில் மகள் ஒருத்தி, சின்னம் சிறு பூத்தொழில்கள் கொண்ட சிறந்த ஆடைக்கு, இரவில் சோற்றுக்கஞ்சி ஊட்டும் சிறப்பு ஒரு பாட்டில் கூறப்பட்டுளது".

“ஆடியல் விழவின் அழுங்கல் மூதூர்
உடை ஓர் பான்மையில் பெருங்கை தூவா
வறன் இல் புலத்தி எல்லித் தோய்த்த
புகாப்புகள் கொண்ட புன்பூங் கலிங்கம்”.
                  நற்றிணை : 90 : 1-4