பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

242

தமிழர் பண்பாடு


கூடையில் பரப்பி வைத்து தாம் வெளிப்படவந்து உலாவல் அல்லது, நோய்களைத் தீர்க்கலாகாத் தெய்வங்கள் ஒருசேர வழிபட்டு இவள் பேயால் பற்றப்பட்டாள் என்ற முடிவிற்கு * வந்து நிற்கும் மகளிரைக் காட்டுகிறார் ஒரு புலவர்.

“மறிக்குரல் அறுத்துத் தினைப்பிரப்பு இரஇச்,
செல்லாற்றுக் கவலைப் பல் இயம் கறங்கத்
தோற்றம் அல்லது நோய்க்கு மருந் தாக.
வேற்றுப் பெரும் தெய்வம் பலவுடன் வாழ்த்திப்
போய்க் கொளீஇயள் இவள் என'’
குறுந்தொகை : 263 : 1-5

மனித இறைச்சி, குருதிகளை விரும்புவது பேய். அதனால், களத்தில் இறவாது வீழ்ந்து கிடக்கும் வீரர்களின் புண்ணைத் தோண்டத் தலைப்பட்டுவிடும். பேய் தொட்ட புண், ஆறுவதும் இல்லை . அவ்வீரன் உயிர் பிழைப்பதும் இலன், இதில் நம்பிக்கை உடைமையால் அவன் மனைவி, பேய், தன் கணவன் இருக்கும் இடத்தையும் அண்டக் கூடாது என்பதால், வீட்டு வாயிலில் இரந்தை, வேப்பந்தழைகளைச் செருகி, யாழ் முதலாம் இசைகளை எழுப்பி, மெல்ல எழுந்து வீட்டை மையிட்டு மெழுகி, வெண் சிறுகடுகை எங்கும் தூவி, ஆம்பல் குழல் ஊதி, மணி அடித்து, காஞ்சிப்பண் பாடி. மாளிகை முற்றிலும் நறுமணப் புகை எழுப்பிக் காப்பன்.

“தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ
வாங்குமருப்பு யாழொடு பல்லியம் கறங்கக்,
கை பயப்பெயர்த்து, மை இழுது இழுகி,
ஐயவி சிதறி, ஆம்பல் ஊதி,
இசைமணி எறிந்து, காஞ்சி பாடி,
நெடுநகர் வரைப்பில் கடிந்றை புகை இக்
காக்கம் வம்மோ ?” -
                -புறம் : 287 : 1-7


சமய வழிபாடுகள்

தொன்மையான வழிபாட்டு முறைகள், ஐந்தாவது அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆரியத்துக்கு முந்திய