பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கள் வாழ்க்கை ....

259


உள்ள சிற்றூரில், மன்றத்தில் நிற்கும் வேங்கை மரங்கள், மன நாளாகிய நல்ல நாளில் பூக்கத் தொடங்க, அவற்றின் மணி மணியான அரும்புகள் மலர்ந்த, பொன் போன்ற மலர்கள் உதிர்ந்து, அகன்ற பாறைகளை அழகு செய்யும் முற்றங்களில், குறவர்கள், தங்கள் மனைகளில், குரவை ஆட்டத்தில் கைதேர்ந்த முதிய மகளிரொடு கைகோத்து, ஆராவாரம் எழக் , குரவை ஆடி விழா எடுப்பதை விளக்குகிறது ஒரு செய்யுள் :

குன்ற வேலிச் சிறுகுடி ஆங்கண்
மன்ற வேங்கை மணநாள் பூத்த
மணியேர் அரும்பின் பொன்வீ தாஅய்
வியலறை விரிக்கும் முன்றில், குறவர்
மனைமுதிர் மகளிரொடு குரவை தூங்கும்
ஆர்கலி விழவு"
                 அகம் : 232 : 6:11.

"கழ் நீரில் மீன் ஓடும், மேல் நீரில் கண்போலும் கருங்குவளை மலரும்; உப்பங்கழி நீரால் சூழப்பெற்ற பயிர் விளைந்து நிற்கும் கழனிகளில், அவற்றைக் காப்பவர் பறை அடித்து எழுப்பும் அரித்து எழும் ஓசை கேட்டுப் பறவைகள் ஓடிவிடும். அரும்புகள் மிதக்கவிட்ட கள்ளையும், இனிய தேறலையும் நறவையும் குடித்து மகிழ்ந்த கோசர் குரவை ஆடி மகிழ்வதைக் கூறுகிறது, ஒரு செய்யுள்.

"கீழ்நீரான் மீன்வழங் குந்து;
மீநீரான் கண்ணன்ன மலர் பூக்குந்து;
கழி சுற்றிய விளைகழனி
அரிப்பறையால் புள் ஒப்பந்து;
நெருடுநீர் கூஉம் மணல் தண்கால்
மென் பறையால் புள் இரியுந்து;
நனைக்கள்ளின். மனைக்கோசர்,
தீந்தேறல் நறவு மகிழ்ந்து
தீங்குரவைக் கொளை தாங்குந்து"
                  - புறம் : 396:1-9

கோசர் சிறந்த வீரர்; ஆகவே அவர்கள். ஆடிய இக்