பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

246

தமிழர் பண்பாடு


குரவைக் கூத்து ஒருவகைப் போர்க்கூத்து ஆகும்.

இதனினும் கொடுமை வாய்ந்த ஒரு போர்க்கூத்து, பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது. “செங்கரும்பு கழிகள் மீது காற்றில் அசைந்தாடும் செந்நெற்கதிர்களை வேய்ந்து கட்டிய பந்தல், விழா எடுக்கும் இடம் போலப் பற்பல அழகுடையதாகத் தோன்ற, ஓயாது நெல் குற்றும் உலக்கை ஒலியோடு, பல்வேறு ஒலிகள் ஒலிக்கும் ஆங்கு, பொன்னால் செய்த தும்பைப் பூவாம் போர்ப் பூவுடன் பசிய பனம் தோட்டையும் அணிந்து கொண்டு, கடுஞ்சினம் மிக்க வீரர்கள் கடல் ஒலிபோல், ஆரவாரப் பேரொலி எழுப்பியவாறே, குரவைக் கூத்தை, வெறி கொண்டு ஆடுவர்”.

“அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த
ஆய்கரும்பின் கொடிக் கூரை
சாறு கொண்ட களம் போல
வேறு வேறு பொலிவு தோன்றக்,
குற்று ஆனா உலக்கையால்,
கலிச்சும்மை வியல் ஆங்கண்
பொலந்தொட்டுப் பைந்தும்பை
மிசை அலங்குளைய பனைப்போழ் செர்இச்
சினமாந்தர் வெறிக்குரவை
ஓதநீரிற் பெயர்பு பொங்க”
                புறம் : 22 : 14-23

கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் ஆரிய நாகரிகம், தமிழர் உள்ளத்துள் , வெள்ளம் போல் பெருக்கெடுத்துப் பாய்ந்து அவர்தம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையையும் மாற்றிவிட்டது. மற்ற செயல்பாடுகளோடு, ஆடல் பாடல்களும் பாதிப்புக்கு உள்ளாகிவிட்டன, பழந்தமிழரின் இயற்கை யோடியைந்த எளிய பண்ணிசை, ஆரியரின் கற்பனைத்திறம் வாய்ந்த பல்வேறு படிகளை உடையவாய மெல்லிசைகளுக்கு இடம் கொடுத்துவிட்டது. அவர்களின் பழைய ஆடல்களின் இடத்தை, ஆரியரின், எளிதில் விளங்கலாகாப் பல்வேறு வகையாகப் பிரிவுண்ட ஆடல்கள் பற்றிக்கொண்டன. பழைய ஆடல், ஒன்று, சொற்களின் துணை வேண்டாமல், மெய்ப்