பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கள் வாழ்க்கை ....

251


எனக் கூறுமளவு உன் புகழும், அவன் புகழும் பெருகி நிற்கப்பாடிவிட்டான். அதனால், சினம் மிக்க சேனைக்கு உரியவனாகிய சேரனுக்குரிய மேலைக்கடலில், பிறநாட்டுப் பொற்காசுகளைச் சுமந்து வரும் கடலோடவல்ல பெரிய நாவாய்கள் ஓடிய இடத்தில், வேறு சின்னஞ் சிறு மரக் கலங்கள் ஓடமாட்டாதது போலும் நிலையினராகி விட்டோமாயினும், எம்முடைய வறுமை துரத்த, உன் பெரும்புகழ் ஈர்த்துக் கொண்டுவர வந்து, உன் வளமைக் குணங்களில், சிலவற்றை நாங்களும் பாடிப் பாராட்டினம்".

"ஒன்னார். யானை ஓடைப்பொன் கொண்டு,
பாணர் சென்னி பொலியத் தைஇ,
வாடாத் தாமரை சூட்டிய, விழுச்சர்,
ஓடாப் பூட்கை உரவோன் மருக!
வல்லேம் அல்லேம் ஆயினும், வல்லே,
நின்வயின் கிளக்குவ மாயின், கங்கல்
துயில் மடிந் தன்ன தூங்குஇருள் இறும்பின்,
பறை இசை அருவி, முள்ளூர்ப் பொருந!
தெறலரும் மரபின் நின் கிளையொடும் பொலிய,
நிலமிசைப் பரந்த மக்கட் கெல்லாம்
புவன் அழுக் கற்ற் அந்த ணாளன்,
இரந்து செல் மாக்கட்கு இனி இடனின்றிப்,
பரந்திசை நிற்கப் பாடினன்; அதற்கொண்டு,
சினமிகு தானை வானவன் குடகடல்
பொலந்தரு நாவாய் ஓட்டிய அவ்வழிப்
பிறகலம் செல்கலாது; அனையேம். அத்தை;
இன்மை தூரப்ப, இசைதர வந்து நின்
வண்மையில் தொடுத்தனம் யாமே, முள் எயிற்று
அரவு எறி உருமின் முரசு எழுந்து இயம்ப,
அண்ணல் யானையொடு வெந்துகளத்து ஒழிய
அரும் சமம் ததையத் தாக்கி, நன்றும்
ஒன்னாத் தெவ்வர்த் தாங்கும்
பெண்ணையம் படப்பை நாடு கிழ வோயே".
                                 புறம். 126