பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கள் வாழ்க்கை ....

255


விழா நிகழும் இடங்களில் ஆடவர்க்குக் காம வேட்கை ஊட்டிக் கவர்ந்து கொள்வான் வேண்டிப் பரத்தையர் பெருங்கூட்டமாக வந்திருப்பர். வாளை மீன்கள், நீரில், பிறழ்ந்து கொண்டிருப்பதைக் கண்டும், அவற்றைக் கவர்ந்து கொள்ளக் கருதாது, அக்குளத்தில் வாழும் நீர்நாய், நாள்தோறும் துயில் மேற்கொண்டுவிடும் இடமாகிய, வாரி வழங்கும் கைவண்மையுடைய கிள்ளிவளவனுக்கு உரிய , கோயில் வெண்ணியைச் சூழ உள்ள வயல்கள் விளைந்து கிடக்கும், நல்ல நிறம் வாய்ந்த, முற்றிய தழைகளால் ஆன ஆடையை, மெத்தென்ற அகன்ற அல்குல் மேல், அழகு உற உடுத்துக்கொண்டு, நானும் இங்கு நடைபெறும் விழாவிற்குச் செல்ல வேண்டும். புதுப்புது வருவாய்களை உடைய ஊரன், என்னை அங்கு, அக்கோலத்தில் காண்பனாயின், என்னை வரைந்து கொள்ளாது விடுத்துப்போவது அரிதினும் அரிதாகும்".

"வாளை, வாளிற் பிறழ, நாளும்
பொய்கை நீர்நாய் வைகுதுயில் ஏற்கும்,
கைவண் கிள்ளி, வெண்ணி சூழ்ந்த
வயல்வெள் ளாம்பல் உருவ நெறித்தழை
ஐது அகல் அல்குல் அணிபெறத் தைஇ,
விழவிற் செலீஇயல் வேண்டும், மன்னோ !
யாணர் ஊரன் காணுநன் ஆயின்
வரையா மையோ அரிதே".
நற்றிணை- 390 : 1-8

பரத்தை, ஆடவர் தேடும் வெறியோடு தெருக்களில் வரும்போது, மனைவியர், தத்தம் கணவரை விழிப்போடு காத்துக் கொள்ள வேண்டும். தலைவியை, அவள் தோழி இவ்வாறு எச்சரிக்கிறாள். "கள்ளமிலா நோக்கமைந்த அழகிய கண்கள், மயிர்ச்சாந்தணிந்து மணம் ஊட்டப்பெற்ற கூந்தல், பருத்த தோள்கள், ஒழுங்குற வளர்ந்த வெண்பற்கள், திரண்டு நெருங்கிய துடைகள் ஆகிய இத்தகு சிறப்புகளால் ஒப்புயவர்வற்ற பேரழகியாகிய பரத்தை அழகிய தழையாடை உடுத்தும் விழா நிகழ் களம் பொலிவு பெற வந்து நின்ற