பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

264

தமிழர் பண்பாடு


பொருபுனல் தரூஉம் போக்கரும் மரபின்
தொன்மா இலங்கைக் கருவொடு பெயரிய நன்மா
விலங்கை”
                 - சிறுபாணாற்றுப்படை : 116 - 120

காவிரி கடலொடு கலக்குமிடத்தில், தொல்லூாழிக் காலத்திலிருந்தே புகழ் பெற்றிருந்த புகார் அல்லது காவிரிப் பூம்பட்டினம் இடம் பெற்றுளது. ஆகவே, அது பல பாடல்களில் கூறப்பட்டுள்ளது. அப்புகார்த் துறைமுகம் “ மேலே விரித்த பாயைச் சுருட்ட வேண்டாமலும், ஏற்றிய பாரங்களை இறக்கிவிட வேண்டாமலும், ஆற்று முகத்துத் துறைமுகத்துள் புகுந்த பெரிய கலத்திலிருந்து பணியாட்கள், பண்டங்களை, இடைநிலை நகருக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கும்” சிறப்புடையதாகக் கூறப்பட்டுளது.

"மீப்பாய் களையாது, மிசைப்பரம் தோண்டாது,
புகாஅர்ப் புகுந்த பெரும்கலம், தகாஅர்,
இடைப்புலப் பெருவழிச் சொரியும்”
                    புறம் : 30 : 11-13

பூக்கள் உதிர்ந்து பரந்து கிடக்கும் அகன்ற துறைகளை யுடைய காவிரியாகிய பெரிய ஆற்றின் பெருக்கெடுத்து வரும் வெள்ள நீர், நுண்மணல் திரளுமாறு மேடாக்கிய வெண் மணற் குவியல்களையும், புதுவருவாய்களையும் உடைய ஊர்களை உடைய செல்வவளம் மிக்க சோழ வேந்தர்களால் புரக்கப்படும் உலகமெல்லாம் பாராட்டும் நன்மை மிக்க நல்ல புகழ் உடையதான நான்மறைகளாம் பழம் நூல்களை அளித்த முக்கண் செல்வன் கோயில் கொண்டிருக்கும் ஆலமுற்றம் என்னும் இடத்தில் அழகுற எடுக்கப்பட்ட பொய்கைகளைச் சூழ்ந்திருக்கும் பூஞ்சோலைகளில், மனையுறை மகளிர், அழகுறச் செய்யப்பட்ட மணற் பாவைகளை வைத்து விளையாடும் துறையினை உடையதும், மகரக் கொடிகளை உச்சியில் கொண்ட வானளாவ உயர்ந்த மதிலையும், முடி அறியப்படாவாறு மிக உயர்ந்த மாளிகைகளையும் உடைய புகார்” என்றும், பூக்கள் மலர்ந்து மணக்கும் நீண்ட