பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

தமிழர் பண்பாடு


வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை , குறிஞ்சி மருதம், நெய்தல் எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே”
- தொல்காப்பியம் - பொருளதிகாரம் -

தொல்காப்பியனார், பழந்தமிழ்க் கடவுள்களை , அவற்றோடு நேரொத்த ஆரியக் கடவுள்களாக அடையாளம் கண்டு, ஆரியர்களுக்குச் சுவர்க்கத்தின் கடவுள், தேவர்க்கு அரசனே ஆதலின், ஆற்றுப் பள்ளத்தாக்குக் கடவுளை , வேந்தன் என்று அழைக்கின்றார். கடல் தெய்வத்திற்கு, வருணன் எனச் சமஸ்கிருதப் பெயர் சூட்டியுள்ளார் என்பது . குறிப்பிடல் தகும். பின் இரண்டின் தமிழ்ப் பெயர்கள் திரும்பக் கிடைக்கவில்லை போலும். அவை, முறையே, சேயோன், கடலோன் என்பனவாகலாம், தொல்காப்பியனார், மக்கள் நிலையாகக் கூடி வாழும் நிலப்பகுதிகளின் பட்டியலில் பாலையைச் சேர்க்கவில்லையாகவே, அப்பாலைக்குரிய கடவுள் பெயர் குறிப்பிடவில்லை.

வட இந்தியாவில் ஐந்து பழங்குடி இனங்கள்

இவ்வைந்து வகையான மனித நாகரீகம், தென்னிந்தியாவைப் போலவே வடஇந்தியாவில், பழங்காலத்தில், அதாவது வேதங்களும், வேத மந்திரங்கள் இயற்றப்படுவதற்கு நிலைக்களமான தீ வழிபாட்டு முறைகளும் எழுவதற்கு முற்பட்ட காலத்தில், வளர்ந்திருக்க வேண்டும். ஆரிய நாகரீகம் தோன்றுவதற்கு முன்பு, வட இந்திய தஸ்யூக்கள், தென்னிந்திய தஸ்யூக்களைப் போலவே, அதே ஐந்து இனத்தவர்களாகப் பிரிந்திருக்க வேண்டும். வட இந்தியா, தென்னிந்தியாவைப் போலவே அதே ஐந்து, இயற்கை யோடியைந்த நிலப்பிரிவுகளாகப் பிரிக்கப்படக் கூடியதே. ஆனால் ஒன்று, அவை தென்னிந்தியப் பிரிவுகளைக் காட்டிலும் பரப்பளவில் பெரியனவாம். அங்கு, அதே நில இயல் காரணங்கள் சொல்லப்பட்டன. ஆகவே அதே - விளைவுகளுக்குத்தான் சென்றிருக்க வேண்டும். ஆனால்