பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

தமிழர் பண்பாடு



ஆராய இது இடம் அன்று. அத்தொல்லூழிக் காலத்திற்குப் பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து, இந்த ஆரிய வழிபாட்டு நெறி, தென்னிந்தியாவுக்குக் குடிபெயர்ந்தபோது, தென்னிந்திய உள்நாட்டுக் கடவுள்களாக, சேயோன் சுப்பிரமணியனாக, மாயோன், விஷ்ணுகிருஷ்ணனாக, கடல் தெய்வம், வருணனாக, கார்மேகக் கடவுள் இந்திரனாக, பாலைத் தெய்வம் துர்க்கையாக மேற்கொள்ளப்பட்டுவிட்டன என்பது, ஈண்டுக் குறிப்பிடல் கூடும். இந்த ஆரியக் கடவுள்கள் தாமும் பண்டைய தஸ்யூக் கடவுள்களின் மறு அவதாரங்கள் தாமா? வேதகாலத்தில் அக்கடவுள்களில், இந்திரனுக்கே தலைமை அளித்திருப்பது, ஏனைய நிலப்பகுதிகளில் வாழும் பழங்குடியினரைக் காட்டிலும், ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதியில் வாழும் மக்கள், தலையாய நிலை பெற்றிருந்ததன் விளைவுதானா என்பன ஈண்டு, ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டா.

வேதச் சொற்றொடர் ஒன்று, மக்கள் ஐந்து பழங்குடியினராகப் பிரிவுண்டிருந்த வரலாற்றுப் பழஞ்செய்தி ஒன்றை நினைவூட்டுவதாக உள்ளது. “பங்கஜனாஹ்” என்பது, அத்தொடர், இப்பொருள் விளங்காத் தொடர், பழைய, புதிய எழுத்தாளர் பலரால், பொருள் காண முயலப்பட்டுளது. ஆனால், மனநிறைவு கொள்ளும் வகையில் பொருள் விளக்க எவராலும் முடியவில்லை. அது, ஆரியத்திற்கு முற்பட்ட, ஐந்து பழங்குடியினரைக் குறிக்க வேண்டும் என்ற ஊகத்தை நான் கூறினேன். ஆனால், தமிழிலக்கியம் பற்றி ஏதும் அறியாத, ஆரியத்துக்கு முந்திய இந்தியாவுக்கும், ஆரிய இந்தியாவுக்கும் இடையில் வரலாற்றுத் தொடர்பின் இன்றியமையாமையினை மதிக்க மறுக்கும் வரலாற்று வல்லுநர்களால், என்னுடைய ஊகத்தின் மதிப்பீட்டை - மதிக்க முடியவில்லை.

“இந்தியாவில் கற்காலம்” (பக்கம் 28-29) என்ற என் நூலினைக் காண்க.