பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.மு. இரண்டாம் ஆயிரத்தாண்டில் வெளிநாட்டு வாணிகம்

65


பாலஸ்தீனத்துடனான வாணிகம்

கி.மு. இரண்டாம் ஆயிரத்தாண்டு முடிவதற்குச் சிறிது முன்னர், எபிரேயர்கள், எகிப்தில் அடிமைத் தளையிலிருந்து விடுபட்டுப் பாலஸ்தீனத்திற்குக் குடிபெயர்ந்துவிட்டனர். அவர்களோடு சென்ற இனிய மணப்பொருள்கள், புனிதத் தன்மை வாய்ந்தனவாக மதிக்கப்பட்டன. இஸ்ரேல் அரசின் தோற்றத்தில் வளம் கொழிக்கும் வாணிகம் முக்கியத்துவம் வாயந்ததாகிவிட்டது. ஆகவே அரேபிய வாணிகர்களால் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட லவங்கம், எபிரேய மத குருக்களின் புனித திருநெய்யாட்டு எண்ணெய்யின் சலவைப் பொருள்களுள் ஒன்றாகிவிட்டது என்பதை அறிகிறோம். (Exod.xx) நீலமணிக்கல்லும் இந்தியாவிலிருந்தே கொள்முதல் செய்யப்பட்டது என்பது ஏற்கனவே குறிப்பிடப்பட்டுளது. இந்தியாவிலிருந்து எகிப்து பெற்ற அனைத்துப் பண்டங்களும், பாலஸ்தீனத்திலும் இறக்குமதி செய்யப்பட்டன எனச் சிரமமின்றி முடிவு செய்து கொள்ளலாம்.

சீனாவுடனான வாணிகம்

சீன லவங்கம், இந்தியக் கப்பற்பயணம் மூலம் அரேபியா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கக் கடற்கரைகளுக்கு வழி கண்டது என்றால், சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையில் கி.மு. இரண்டாம் ஆயிரத்தாண்டில், வாணிகப் போக்குவரவு இருந்திருக்க வேண்டும். இவ்வாணிகம் குறித்த எழுத்து மூல ஆவணங்கள் சில அழியாமல் உள்ளன. யுதிஸ்டிரர் பெற்ற திறைப்பொருள்களுள் சீனாவிலிருந்து வந்த பட்டையும், குறிப்பிடுகிறது, மகாபாரதம். (சீன கமுத்பவன் அவுர்னம் - மகாபாரதம் - 2:51:1843) சீன நாட்டு வரலாற்றுப் பதிவேடுகள், கிறிஸ்தவ ஆண்டுத் தொடக்கத்திற்கு முன்னர், ஏறத்தாழ, கி.மு. 12 ஆம் நூற்றாண்டு போலும் அத்துணைப் பழங்காலத்தில், மலாக்காவோடு கொண்டிருந்த கடற்பயணத்தைக் குறிப்பிடுகின்றன. (Scoff's Periplus Page: 246). அதிலிருந்து மலேயா, இவ்வாணிகத்தின் பொருள் களஞ்சியமாக இருந்து வந்துளது. தமிழ்நாட்டில், அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் ஒரு பொருளாம் வெற்றிலை, தமிழர்களால்