பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

தமிழர் பண்பாடு


ஐரோப்பிய வரலாற்று ஆசிரியர்கள், ஆரியர் தஸ்யூக் களிடையேயான பகை, இனம் பற்றியதாம் என்பதற்காம் பல்வேறு விளக்கங்களிலும், தஸ்யூக்களை ஆரியர்களோடு இரண்டறக் கலக்கப் பண்ணும் புரியாப் புதிரிலும், முழுமை. யாக ஆழ்ந்து போயிருந்தமையால், ஆரிய வழிபாட்டுமுறை பரவிய பின்னர், தஸ்யூ வழிபாட்டு முறையின் வரலாறு பற்றி ஆய, அவர்கள் ஒரு முறையும் நின்று நோக்கினாரல்லர். இவ்வினாவுக்குப் பொருத்தம் உற விடையளிக்க நம்மால் இயலுவதற்கு, “ஸ்ரெளத” வேள்விகள் எனப்படுபவை, “ர்த்விகா” என அழைக்கப்படும் வேள்வி ஆசிரியர்கள் மட்டுமே பங்கு கொள்ளக் கூடியது.

வேத வேள்விகளை நடத்துவதற்குத் தேவைப்படும் பொருட்களைத் தருமளவு, பெருஞ்செல்வம் வாய்ந்த வேந்தர்களும், வேந்தர் நிகர் விழுநிதிச் செல்வர்களும் வணிகர்களும், அவ்வேள்விகள் தரும் கட்புலனாகாப் பலன்களைத்தான் பெற முடியுமேயல்லாது, அவ்வேள்விச் சடங்குகளில் பங்கு கொள்ளக் கூடாது. எல்லோர்க்கும் தெரிந்து சமயம் என அழைக்கப்பட வேண்டியதான பொது மக்களின் சமயச் சடங்குகள் ஆகா என்பதை நாம் நினைவில் கொள்ளுதல் வேண்டும்.

மனைகளில் மேற்கொள்ளப்படும் பல்வேறு தீ வழிபாடுகளில் பயன்படும் மந்திரங்களை அதர்வ வேதம் கொண்டுள் ளது உண்மை. ஆனால், இவ்வழிபாட்டு முறைகள், ஒருவர் விடாமல் மக்கள் எல்லோராலும், ஏதும் அறியாப் பாமரர் களைப் போலவே முற்றவும் அறிந்த உயர்ந்தோர் ஒரு சிலராலும் பின்பற்றப்பட்டன என்பதை உறுதி செய்யும் சான்று எதுவும் அறவே இல்லை . வேதகாலம் முழுவதும் சாதாரண பொதுமக்கள் தீ வழிபாட்டு முறையல்லாத, சமய வழிபாட்டு நெறிகளைப் பெற்றே இருக்க வேண்டும். அவை, பண்டைய தஸ்யூ வழிபாட்டு முறைகளாகவே இருந்திருக்க வேண்டும். அவ்வழிபாட்டு முறைகள் எவ்வகையைச் சார்ந்தவை, பொதுமக்கள் வழிபட்ட கடவுள்கள் யாவை என்பதை அறிந்து கோடற்கான மார்க்கம் ஏதேனும் உண்டா?