பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆகமங்களின் தோற்றம்

81


தமிழ் இந்தியா, வட இந்தியாவைப் போலவே, ஆரிய தீ வழிபாட்டு நெறி தோன்றுவதற்கு முன்னர், தஸ்யூக்களின் தீ வழிபாடற்ற வழிபாட்டு முறையினையே பின்பற்றி வந்தது; பண்டைத் தமிழரின் சமய வழிபாட்டு முறை பற்றிய விளக்கக் குறிப்பு முன்பே கொடுக்கப் பட்டுளது. வடநாட்டுச் சாதாரண மக்கள், வேதகாலம் தொடங்குவதற்கு முற்பட்ட காலத்தில் வழிபட்டு வந்தது போலவே, வேதகாலத்திலும், தீ வழிபாடு இல்லாத, உள்நாட்டுக் கடவுள்களையே வழிபட்டு வந்திருக்க வேண்டும். அவரவர்களின் இன்றைய வழிபாட்டு நெறியைப் போலவே, தஸ்யூக்களின் வழிபாட்டு நெறி வழிபாட்டினை அடிப்படையாகக் கொண்டா ஆடல் பாடல் தொடர்ந்து வர கடவுள் திருமேனிகளுக்கு உணவு படைத்தலைக் கொண்டிருந்தது. வால்மீகி கூற்றுப்படி, சுக்கிரீவனின் முடி சூட்டு விழா, அவ்வகையில்தான் கொண்டாடப்பட்டது. அந்நாட்களில் முடிசூட்டு விழா, சமயச்சார்பற்றது அன்று. மாறாக சமயச் சார்புடைய ஒரு சடங்கே ஆகும்.

மகாபாரதப் போருக்குப் பின்னர், தீ வழிபாட்டு முறை மறையத் தொடங்கவே பிராமணச் சமய ஆசிரியர்கள், தங்கள் தொழில் அழிந்துபோனதை அறிந்து கொண்டு நாட்டில் அப்போதும் நடைமுறையில் இருந்துவந்த தீ வழிபாடற்ற வழிபாட்டு நெறியில் தங்கள் கருத்தைத் திருப்பியிருத்தல் வேண்டும். பெரும்பாலான மக்களின் இயல்பு, உணர்ச்சி வயப்பட்டுப் போவதே ஆதலின் - கட்புலனாகா நுண்ணிய உலகியல் கடந்த பொருளுணர்ச்சி குறித்த ஆய்வாம் உணர்விலேயே வாழ்ந்துவிடவல்ல உள்ளம் வாய்க்கப் பெற்ற, அறிவார்ந்த உணர்ச்சியினராகிய மக்கள், எக்காலத்தும் ஒரு சிலரே. அம்மக்களுக்குப் பக்தி மார்க்கம் மீதான கவர்ச்சி பிராமணர்களின் கருத்தைப் பக்திவழியில் திருப்பியதற்கான மற்றொரு காணக்கூறு ஆதல் வேண்டும்.

அப்பிராமணர்கள், திரிமூர்த்திக் கொள்கையை, தாங்கிய சமயக் கொள்கையாம் உலகப் பருப்பொருளின் முக்குணக் கொள்கையோடு ஒன்றுபடுத்திட உருவாக்கினர். விஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களுக்கும், சிவனின் எண்ணற்ற , ஆனால்