பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

ஆருயிர் மருந்து 103 ஒருவன் விரைந்து அரச அவையை அடைந்து, கோவ லன் மகளாகிய சிறந்த தவவொழுக்கமுடைய மணி மேகலை தன் அமுத சுரபியோடு காஞ்சி நகர் வந்து தருமத வனத்தே தங்கியுள்ளாள் என்பதை எடுத் துரைத்தான். அது கேட்ட அரசன் தன் மந்திரிகளும் மற்றவர்களும் உ.டன் சூழ்ந்து வர அச்சோலையை அடைந்து மணிமேகலையைக் கண்டு வணங்கி, .

  • செங்கோல் கோடியோ செய்தவம் பிழைத்தோ

கொங்கவிழ்-குழலார் கற்புக் குறைபட்டோ/ நலத்தகை நல்லாய் நன்னா டெல்லாம் அலத்தற் காலைஆகியது என்று தன் நாட்டின் பஞ்ச நிலையை எடுத்துரைத் தான். மேலும் மணிமேகலை வருவதைத் தான் முன் னமே அறிந்திருத்தலையும் உரைத்தான். தன் நாடு கவி னொழிய வருந்தி யிருந்தகாலத்து, ஒரு பெருந்தெய்வம் அவன் முன்னே தோன்றி, அவனது நல்வினையால் ஒரு பெண் அங்கு வருவாளென்றும், அவ கையிலுள்ள தெய்வப் பாத்திரத்தில் எடுக்க எடுக்கக் குறை யாது உணவு பெருகுதலால் அவள் நடுங்கும் பஞ்சத்தை நீக்குவாளென்றும், அவள் வந்தபின் நாட்டில் மழை பெய்து நல்வளம் பயக்குமென்றும் கூறி, அவள் வந்து தங்குவதற்காக ஒரு பொய்கையும் சோலையும் உண் டாக்குக என்று உணர்த்தியதை உரைத்தான். மேலும் அத்தெய்வ உத்தரவை மேற்கொண்டு தான் அமைத்த மணிபல்லவம் போன்ற சோலையையும் பொய்கையையும் மணிமேகலைக்குக் காட்டினான், அவற்றை கண்ட மணிமேகலை மிகவும் மகிழ்ந்தவளாகி,