பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

49. ஆருயிர் மருந்து வத்தில் ‘மன்னுயிர் நீத்த ஆபுத்திரன் சாவக நாட்டில் பிறந்ததன் அறிகுறி யிவைகள் ; அவனைப் பற்றி அற வண அடிகளிடம் கேட்டறியுங்கள்’ என்று கூறிற்று. அவர்களும் அவ்வாறே அறவணரைச் சார்ந்து அனைத் தும் அறிந்தனர். பிறந்த ஆபுத்திரன் பெருமையை அறிந்த அச் சாவக நாட்டை ஆண்ட மன்னனான பூமிசந்திரன் என் பவன் மண்முக முனிவனிடம் வந்து அவனடி வீழ்ந்து வணங்கி, தனக்கு மகப்பேறில்லாமையை எடுத்து விளக்கி, அந்த ஆபுத்திரனைத் தனக்கு மகனாக அளிக்க வேண்டினன். முனிவனும் = இளையோன் அரசாளத் தகுதியும் அமைப்பும் உடையவன் என்பதை அறிந்த வன் ஆதலின், அவ்வாறே அரசனிடம் ஒப்படைத்தான். அவன் பின்னர் அரசனாகிச் சாவக நாட்டை ஆள்கிறான் என்று ஆபுத்திரன் வரலாற்றை அப்படியே எடுத்துக் கூறினார் அறவணவடிகள். பின்னர் அப்போது காவிரி வளம் சுரக்கும் நாட்டிலும், பஞ்சம் தலையெடுத் துள்ள தால் உயிர்கள் வருந்தும் வருத்தத்தைக் கூறி, பய னுள்ள பாத்திரத்தை அப்போதே பயன் படுத்தவேண் டும் என்பதையும் எடுத்துக்காட்டி மன்பதையின் துயர் நீக்கவும் ஆணையிட்டார். அனைத்தும் அறிந்த மணிமேகலை அவ் வறவண வடிகளைப் போற்றி வணங்கி அவர் ஆணை வழியே ஆருயிர் மருந்தாகிய உணவினை அனைவருக்கும் வாரி வழங்கப் புறப் பட்டாள். ' பிக்குணிக் கோலம் அமுத சுரபியைக் கையிலேந்திய மணிமேகலை அப் புகார் நகரின் தெருவு தொறும் பிச்சை ஏற்கப் புகுந்