பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருயிர் மருந்து

94 ஆருயிர் மருந்து தீவதிலகை கூறல் மணிமேகலையும் ஆபுத்திரனும் அப்பொய்கையின் ஒரு சார் தங்கியிருந்த அந்த வேளையில், காவற்றெய்வ மாகிய தீவதிலகை அவர்களை வந்து கண்டு, வணங்கி, 'அருந்தும் உயிர் மருந்து முன் அங்கையிற் கொண்டு, பெருந்துயர் தீர்த்த அப்பெரியோய் வந்தனை' என்று வரவேற்புக் கூறி மேலும் நிகழ்ந்ததை உரைத்தாள். அந்நாளில் ஏற்பார் இல்லை என்று அமுதசுரபியைக் கோமுகியில் இட்டு அவன் இறந்தபின் அவனைத் தேடி வந்து அவனைக் காணாமையால் ஒன்பது செட்டிகள் வாடி உயிர்விட, அவர்கள் இறந்த பின்னர் அவர்க ளோடு வந்தவரும் இறந்தனர் என்று கூறி அவர்கள் தம் எலும்புகளை யெல்லாம் காட்டினள். கடைசியில் அவன் எலும்பினையும் காட்டினாள். அனைத்தையும் காட்டி, தற்கொலைசெய்துகொண்ட தோடன்றி, அதன் காரணமாக மற்றவரையும் கொலை செய்த அவன் தான் அரசனாயினான் என்று கூறினாள். அனைத்தையும் கண் டும் கேட்டும் தன்னை மறந்து வியப்புற்றிருந்தான் ஆபுத்திரன். புகார் போயது ஆபுத்திரன் வரலாற்றை உணர்த்திய தீவதிலகை பின்னர் மணிமேகலையை நோக்கிப் பேசலானாள். காவி ரிப்பூம்பட்டினம் கடலால் கொள்ளப்பட்டது என்று காரணமும் காட்டினாள். *கிள்ளியின் நாகநாட்டு மனைவி பீலிவளை தான் பெற்ற மைந்தனான சோழ இளவரசனுடன் அம் மணிபல்லவத்தில் வந்து புத்த பீடிகையை வலம் கொண்டிருந்த காலத்தில், கிள்ளி 18