பக்கம்:ஆர்க்டிக் பெருங்கடல்.pdf/40

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
5. எஸ்கிமோக்கள்

சொல்லின் பொருள்

எஸ்கிமோ என்னும் சொல் இந்தியச் சொல்லாகும். அதற்குப் பொருள், பச்சை இறைச்சியை உண்பவர்கள் என்பதாகும். இம் மக்கள் ஆர்க்டிக் பகுதியில் வாழ்கின்றனர்.

வாழும் இடங்கள்

இவர்கள் முதன் முதலில் சைபீரியாவில் வாழ்ந்தவர்கள். இன்றும், உருசியாவைச் சார்ந்த சைபீரியாவில், சிலர் வாழ்கின்றனர். இவர்களது தொகை கிட்டத்தட்ட 40,000 ஆகும். இவர்களில் 15,000 பேர்களுக்கு மேல் அலாஸ்காவில் (அமெரிக்கா) வாழ்கின்றனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பெரிங் கடலைக் கடந்து, இவர்களது முன்னோர் அலாஸ்காவை அடைந்தனர்.

இதைவிட அதிகமான பேர் கிரீன்லாந்தில் வாழ்கிறார்கள். 7,000 பேருக்கு மேல் கனடாவின் வட பகுதியிலும், மையப் பகுதியிலும் வாழ்கின்றனர். எஞ்சிய பேர் லேப்ரடாரில் (கனடா) வாழ்கின்றனர்.

இயல்புகள்

எஸ்கிமோக்கள் குட்டையாயும் பருத்தும் இருப்பார்கள். தட்டையான மூக்குகளும், அகன்ற முட்டை வடிவமுள்ள முகங்களும், உயரமான